உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.யு. டி. ஏ., புதிய தலைவருக்கு காத்திருக்கும் சவால்கள்

கே.யு. டி. ஏ., புதிய தலைவருக்கு காத்திருக்கும் சவால்கள்

தங்கவயல்,: தங்கவயல், பங்கார்பேட்டை ஆகிய இரு சட்டசபை தொகுதிகளை மேம்படுத்த கே.யு.டி.ஏ.,வின் புதிய தலைவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.தங்கவயல், பங்கார்பேட்டை உள்ளிட்ட 160 கிராமங்களை மேம்படுத்தும் அதிகாரம் மிக்க, கே.யு.டி.ஏ., எனும் கே.ஜி.எப்., டெவலப்மென்ட் அத்தாரிட்டி தலைவராக பங்கார்பேட்டையின் கோபால்ரெட்டி நேற்று முன்தினம் பதவியேற்றார். கே.யு.டி.ஏ., 'தங்கவயல் அபிவிருத்தி குழுமம்' என்றும் அழைக்கப்படுகிறது.தலைவர் பதவியில் இருப்பவருக்கு அமைச்சருக்குரிய தகுதி, அலுவலகம், கார், எரிபொருள், வீட்டு வசதி, உதவியாளர், கவுரவ சம்பளமாக மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம்.தற்போது பதவியேற்றிருக்கும் பங்கார்பேட்டையின் கோபால் ரெட்டி, 23 மாதங்கள் பதவியில் இருக்கலாம் எனவும், பின், தங்கவயலை சேர்ந்த ஒருவருக்கு விட்டு கொடுக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.கே.யு.டி.ஏ.,வின் அதிகாரங்கள் என்னென்ன?பஸ் நிழற்குடை, சாலை, நடைபாதைகள், கால்வாய், பூங்கா வசதிகள் செய்வது; விவசாய நிலத்தை குடியிருப்பு லே - அவுட் ஆக்குவதற்கு அனுமதி அளிப்பது; நகரில் புதிய கட்டடம் கட்ட அனுமதி தருவது; கட்டடத்திற்கு மின்சாரம், குடிநீர் குழாய் இணைப்பு பெற அனுமதி கட்டாயம். இதன் பின்னரே நகராட்சி அனுமதி அளிக்கும்.வீட்டுமனை, வீடு, வங்கிகளில் அடகு வைக்க செல்லும் பட்சத்தில் கே.யு.டி.ஏ.,வில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அரசிடம் நிலம் வாங்கி, லே- - அவுட் அமைப்பதற்கு, கே.யு.டி.ஏ.,வுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு 20 ஆண்டுகளுக்கு முன், ராஜிவ் காந்தி லே - -அவுட் உருவாக்கப்பட்டது. அப்போது ஒரு மனை 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த மனை மதிப்பு 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகி உள்ளது.தற்போது, அனைத்து வசதிகளை கொண்ட, வளர்ச்சி பெற்ற நகரமாக ராஜிவ் காந்தி லே -- அவுட் உருவாகி உள்ளது. ஏற்கனவே கே.யு.டி.ஏ., வாங்கி வைத்துள்ள பாரண்டஹள்ளி அருகே, 34 ஏக்கர் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற, அதன் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இதன் மூலம், கே.யு.டி.ஏ., வுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.அரசின் நிதியுதவி தேவைநான், பத்து மாத காலம் மட்டுமே தலைவர் பதவியில் இருந்தேன். நகரப்பகுதிகளில் மட்டுமின்றி, தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதிகளிலும் கால்வாய், சாலைப்பணிகள், பூங்கா என பல்வேறு பணிகளை மேற்கொண்டேன். வளர்ச்சிப் பணிகளுக்கு அரசு நிதியுதவி எதுவுமே வழங்கவில்லை.மாறாக, கே.யு.டி.ஏ.,வுக்கு வரும் கட்டண வசூல் வருமானம் வைத்து தான் பணிகளை மேற்கொள்ள நேர்ந்தது. தற்போது தலைவராக பதவியேற்ற கோபால் ரெட்டி சிறப்பாக பணியாற்ற, அரசின் நிதியை எம்.எல்.ஏ.,க்கள் பெற்று தர வேண்டும். வீட்டு மனைகள் ஏலம் விட்டு பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.-ஜெயபால், முன்னாள் தலைவர், கே.யு.டி.ஏ., தங்கவயல்கவனிக்க வேண்டியவைராபர்ட்சன்பேட்டை நீதிமன்றம் அருகே, கே.யு.டி.ஏ.,வுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு வணிக வளாகம் ஏற்படுத்த வேண்டும். இதன் கடைகளை பொது ஏலம் விட வேண்டும். இதன் மூலம் நகர் வளர்ச்சி அடையும்.நகரப்பகுதிகளில் மட்டுமின்றி, கிராமப்பகுதிகளிலும் கூட மேம்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மூலம் நிதியுதவி பெற்று வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.ஆலமரம், பங்கார்பேட்டை, பாரண்டஹள்ளி, கேசம்பள்ளி, கெம்பாபுரம், காமசமுத்ரா ஆகிய இடங்களில் பஸ் நிலையம் மேம்படுத்த வேண்டும். வீட்டு மனைகள், மின் கோபுரம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ