உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமாரசாமி கிங் ஆப் பிளாக்மெயில் துணை முதல்வர் சிவகுமார் கிண்டல்

குமாரசாமி கிங் ஆப் பிளாக்மெயில் துணை முதல்வர் சிவகுமார் கிண்டல்

சிக்கமகளூரு : “அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த நேரம் உள்ளது. சட்டசபையில் விவாதிக்க வேண்டும். குமாரசாமி கிங் ஆப் பிளாக்மெயில்,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.'பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச பென்டிரைவ் வழக்கில் துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்புள்ளது. இவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்' என, மாநில ம.ஜ.த., தலைவர் குமாரசாமி வலியுறுத்தினார்.இவருக்கு பதிலடி கொடுத்து, சிக்கமகளூரில் நேற்று சிவகுமார் கூறியதாவது:ஆபாச பென்டிரைவ் குறித்து குமாரசாமிக்கு தெரியும். அவருக்கு என் ராஜினாமா வேண்டுமாம், கொடுக்கலாம். குமாரசாமி 'கிங் ஆப் பிளாக் மெயில்'. அவர் இந்த அனைத்து விஷயங்களையும், சட்டசபைக்கு கொண்டு வரட்டும். அங்கு விவாதிக்கலாம். அனைவரையும் ஒழித்துக்கட்டுவதே, அவரது வேலை. அதிகாரிகள், அரசியல் தலைவர்களை மிரட்டுவது, குமாரசாமியின் வழக்கம். இதற்கு முன்பு, 'பிரஜ்வல் ரேவண்ணா, எனக்கும் மகன்தான்' என, குமாரசாமி கூறியிருந்தார்.இப்போது, 'ரேவண்ணா குடும்பம் வேறு, என் குடும்பம் வேறு, உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்' என்கிறார். இப்போது ஏன் எரிந்து விழுகிறார்? இவர் நீதிமன்றத்துக்கு வக்கீலாக சென்று வாதிடட்டும்.சிவகுமார், சித்தராமையா, சுர்ஜேவாலா 'இன்வெஸ்டிகேஷன் டீம்' என, குமாரசாமி விமர்சித்துள்ளார். கதாநாயகன், டைரக்டர், தயாரிப்பாளர் என, அனைத்தும் இவரே. இவருக்கு மரியாதை இருந்தால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியம் கூறட்டும்.என் மீது குற்றம் சுமத்தாவிட்டால், அவருக்கு மார்க்கெட் இருக்காது. என் பெயரை கூறாவிட்டால் ஊடகத்தினர், குமாரசாமியின் முகத்தை காண்பிப்பதில்லை.என் பெயரை உச்சரிக்காவிட்டால், அவருக்கு உறக்கம் வராது. அதிக வலுவாக இருந்தால், எதிரிகளும் அதிகம் இருப்பர். லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது. ஓய்வு பெறுவதற்காக சித்தார்த் வீட்டுக்கு வந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை