உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமாரசாமிக்கு 3வது முறையாக இதய அறுவை சிகிச்சை

குமாரசாமிக்கு 3வது முறையாக இதய அறுவை சிகிச்சை

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, மூன்றாவது முறையாக இதய அறுவை சிகிச்சை, நேற்று சென்னையில் நடந்தது.கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் குமாரசாமி, 64. இவருக்கு இதய கோளாறு காரணமாக, ஏற்கனவே இரண்டு முறை அறுவை சிகிச்சை நடந்தது. மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், இரண்டு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவ நிபுணர்கள் குழு, நேற்று அவருக்கு இரண்டு மணி நேரம், இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தது. தற்போது சிறப்பு வார்டில் சிகிச்சை பெறுகிறார். இது, அவர் செய்து கொண்ட மூன்றாவது இதய அறுவை சிகிச்சை. குமாரசாமி விரைவில் குணமடைய வேண்டி, அவரது ஆதரவாளர்கள், ம.ஜ.த., தொண்டர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்தனர். வரும் 25ம் தேதி மருத்துவமனையில் இருந்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.குமாரசாமியின் மகன் நிகிலின், 'எக்ஸ்' பதிவு:என் தந்தைக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மிகவும் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை நடந்தது. ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள், ம.ஜ.த., தொண்டர்கள் என அனைவரது பிரார்த்தனையின் காரணமாக, அவர் நலமுடன் உள்ளார். அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில், மனப்பூர்வமான நன்றி.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
மார் 23, 2024 11:44

என்ன ஆனாலும் மக்கள் இருக்க அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எல்லாமே இலவசம் வந்தே மாதரம்


பரத்வாஜ்
மார் 22, 2024 07:52

ஹார்ட்டையே கழட்டி வெச்சாலும்.பதவி வெறி போகாது.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி