உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னைல மட்டுமா தலைநகரிலும் வக்கீல்கள் மோதல் - கும்மாங்குத்து சட்டை கிழிப்பு

சென்னைல மட்டுமா தலைநகரிலும் வக்கீல்கள் மோதல் - கும்மாங்குத்து சட்டை கிழிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது போன்று டில்லியில் கீழ் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் இடையே அடிதடி சண்டைேயுடன் சட்டை கிழிப்பு சம்பவமும் நடந்தது.கடந்த 20ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது; நாற்காலிகளை துாக்கிப் போட்டு தாக்கியதில், நான்கு பேர் காயம்அடைந்தனர்.வழக்கறிஞர்கள் மோதலால், எழும்பூர் நீதிமன்ற வளாகம், கலவரம் நடந்த இடம் போல காட்சி அளித்தது.இந்நிலையில் இதே போன்று தலைநகர் டில்லியில் கிழக்கு மாவட்டத்தில் ஷகார்பூரில் சிறப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் ஹாலில் இன்று(23.07.2024) வழக்கறிஞர்களிடையே ஏறபட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்தது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். நீண்ட நேரம் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட நிலையில் களைப்படைந்த பின் அவர்களாகவே சண்டையை நிறுத்தி விட்டு கலைந்து சென்றனர். இதனை அங்கிருந்த போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். வக்கில்கள் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.லஷ்மி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Lion Drsekar
ஜூலை 24, 2024 12:42

இதுதான் உண்மையான கல்வி, கல்வியின் தரம். எல்லா இடங்களிலும் இதே நிலைதான். அவைகள் எளிய தெரிவதில்லை. சிலர் வேலை செய்வது இல்லை கேட்டால், கேட்டவர் சிறைக்கு செல்லும் நிலை, இவைகள்தான் ஜனநாயகத்தின் வெற்றிப்பாதை . வந்தே மாதரம்


தமிழ்வேள்
ஜூலை 24, 2024 12:11

ஆடிட்டர்களுக்கு மூன்று ஆண்டுகாலம் பயிற்சி என்று உள்ளபோது வக்கீல்களுக்கு மட்டும் அந்த பயிற்சிக்காலம் ஏன் இல்லை? ஒவ்வொரு சட்டம் படித்த மாணவரும் முன்புபோல மூன்று ஆண்டுகள் ஜூனியர் வக்கீலாக பயிற்சி பெற்றால் மட்டுமே, சீனியர் மற்றும் அவர் பணியாற்றும் கோர்ட்டில் ஒழுக்கத்துக்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே பார் கவுன்சில் பதிவு தரப்படவேண்டும் ..இல்லையென்றால் சரிப்பட்டு வராது ...


N Sasikumar Yadhav
ஜூலை 24, 2024 11:19

இதுபோன்ற விஷயங்களுக்கு திராவிட மாடல் எப்போதுமே முன்னோடி


அப்புசாமி
ஜூலை 24, 2024 10:12

இவிங்களை ஒண்ணும் பண்ணிடாதீங்க. பிற்காலத்தில் கொலிஜியம் இவிங்களை உச்சநீதி மன்றத்துக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கு.


Kanns
ஜூலை 24, 2024 08:56

Sack & Punish, Police & Judges Failing to Control Greedy-Rowdy-Case Hungry Advocates & Not Punishing Power-Misusing Rulers, Stooge Officials & Vested False Complainant Gangsters


ராமகிருஷ்ணன்
ஜூலை 24, 2024 07:13

இவர்களா சட்டம் நீதியை காப்பவர்கள்?


sankaranarayanan
ஜூலை 24, 2024 02:18

வாயாடி வக்கீல்கள் என்று இனி சொல்லாமல் இனிமேல் போராடி வக்கீல்கள் என்று சொல்லலாமா அடுத்தது அடிதடி வாக்கீல்கள் என்றும் கூறவேண்டிய தருணம் வந்துவிடும்


ديفيد رافائيل
ஜூலை 23, 2024 22:53

பொதுமக்களுக்கு மட்டும் தான் சட்டம் போல


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை