உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நில தகராறில் விவசாயி கொலை உறவினர்கள் 2 பேருக்கு ஆயுள்

நில தகராறில் விவசாயி கொலை உறவினர்கள் 2 பேருக்கு ஆயுள்

பெலகாவி: நில தகராறில் விவசாயியை வெட்டி கொன்ற உறவினர்கள் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பெலகாவி சவுந்தட்டி அருகே அச்சமட்டி கிராமத்தில் வசித்தவர் ருத்ரகவுடா காளி மணி பாட்டீல், 45; விவசாயி. இவருக்கும், இவரது உறவினர்களான ஓம்கார் கவுடா காளிமணி, 43, தியான கவுடா காளிமணி, 39 ஆகியோருக்கும் இடையில், நில தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்தது.கடந்த 2020 அக்டோபர் 11 ம் தேதி, விவசாய நிலத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்த ருத்ரகவுடாவை, ஓம்கார், தியான கவுடா ஆகிய இருவரும், அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இருவரையும் சவுந்தட்டி போலீசார் கைது செய்தனர்.பெலகாவி ஆறாவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி மஞ்சுநாத் தீர்ப்பு கூறினார். ஓம்கார், தியான கவுடாவுக்கு ஆயுள் தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ