உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான ஊழல் வழக்கு ரூ.205 கோடி முடக்கம்

மதுபான ஊழல் வழக்கு ரூ.205 கோடி முடக்கம்

புதுடில்லி, சத்தீஸ்கர் மதுபான ஊழல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி மற்றும் காங்கிரைச் சேர்ந்த ராய்ப்பூர் மேயரின் அண்ணன் உள்ளிட்டோரின், 205 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முந்தைய முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, மதுபானங்களை சட்டவிரோதமாக விற்று, 2,000 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக மாநில பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு அமைப்பு வழக்கு பதிந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரிக்கிறது. இந்த வழக்கில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அனில் துதேஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி, 205 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நபர்களின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில், அனில் துதேஜாவின் 16 கோடி ரூபாய் சொத்துகள், காங்கிரசைச் சேர்ந்த ராய்ப்பூர் மேயர் அய்ஜாஸ் தேபரின் சகோதரர் அன்வர் தேபரின் 116 கோடி ரூபாய் சொத்து கள், மாநில கலால் துறை செயலர் அருண்பட்டி திரிபாதியின் 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அடக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ