உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லிவ்-இன் பார்ட்னர் கணவராக முடியாது குடும்ப வன்முறை வழக்கில் உத்தரவு

லிவ்-இன் பார்ட்னர் கணவராக முடியாது குடும்ப வன்முறை வழக்கில் உத்தரவு

கொச்சி, 'லிவ்இன்' முறையில் வாழ்பவரை கணவராக கருத முடியாது. அதனால், அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ், கொடுமைப்படுத்தியதாக வழக்கு தொடர முடியாது என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.

திருமணம்

கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த, லிவ்இன் என்ற முறையில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் பெண் ஒருவர், தன்னுடன் வாழும் ஆண் நண்பர் தன்னை கொடுமைப்படுத்துவதாக, குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் செய்தார்.இதை எதிர்த்து அந்த ஆண் நண்பர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி பக்ருதீன் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டத்தின், 498ஏ பிரிவின்படி, தன் கணவர் அல்லது அவருடைய குடும்பத்தார் கொடுமைப்படுத்துவதாக, பெண்கள் புகார் அளிக்க முடியும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நடவடிக்கை

அதே நேரத்தில், இந்த சட்டத்தின்படி கணவர் என்பது, திருமண உறவின் வாயிலாக உடன் வாழும் ஆணையே குறிக்கிறது.ஆனால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்யாமல், லிவ்இன் என்ற முறையில் சேர்ந்து வாழும் ஆண் துணையை, கணவராகக் கருத முடியாது. பங்குதாரர் என்று தான் அழைக்க வேண்டும். அதனால், இந்த சட்டப் பிரிவின்கீழ், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை