உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுரை டூ பெங்களூரு, சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்: நிற்கும் ஸ்டாப்கள், கட்டண விபரம் இதோ!

மதுரை டூ பெங்களூரு, சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்: நிற்கும் ஸ்டாப்கள், கட்டண விபரம் இதோ!

சென்னை: எழும்பூர்- நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் எந்தெந்த இடங்களில் நின்று செல்லும் மற்றும் கட்டணம் விபரங்கள் பின்வருமாறு:எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்* சென்னை - நாகர்கோவில் (20627) வந்தே பாரத் ரயில் அதிகாலை 5:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு 5:23 க்கு தாம்பரம், 6:52க்கு விழுப்புரம், 8:55க்கு திருச்சி, 9:53க்கு திண்டுக்கல், 10:38க்கு மதுரை வந்து சேரும். இங்கிருந்து 10:40க்கு புறப்பட்டு 11:35க்கு கோவில்பட்டி, மதியம் 12:30க்கு திருநெல்வேலி, 1:50க்கு நாகர்கோவில் சென்றடையும்.* மறுமார்க்கத்தில் மதியம் 2:20க்கு புறப்பட்டு மாலை 3:18க்கு திருநெல்வேலி, 3:58க்கு கோவில்பட்டி, 5:03க்கு மதுரைக்கு, 5:48க்கு திண்டுக்கல், 6:45க்கு திருச்சி, 8:53க்கு விழுப்புரம், 10:28க்கு தாம்பரம், 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் புதன் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.

மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில்

* மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (20671) அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 5:59க்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து காலை 6:01க்கு புறப்பட்டு 6:50க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து 6:55க்கு புறப்பட்டு 8:08க்கு கரூர், 8:32க்கு, நாமக்கல், 9:15க்கு, சேலம், மதியம் 12:50 மணிக்கு பெங்களூரு கிருஷ்ணராஜபுரம், 1:00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 45 நிமிடம்.* மறுமார்க்கத்தில் மதியம் 1:30க்கு பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்திற்கு 1:55, மாலை 4:50 க்கு சேலம், 5:38 க்கு நாமக்கல், 5:58 க்கு கரூர், இரவு 7:20 மணிக்கு திருச்சி, 9:08க்கு திண்டுக்கல், 9:45 மணிக்கு மதுரை வந்து சேரும். மொத்த பயண நேரம் 8 மணி 15 நிமிடம். 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.

கட்டண விபரங்கள்

* எழும்பூர் - தாம்பரம் (சேர்கார்- ரூ.380, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.705),* எழும்பூர் - விழுப்புரம் (சேர்கார்- ரூ.545, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,055),* எழும்பூர் - திருச்சி (சேர்கார்- ரூ.955, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,790),* எழும்பூர் - திண்டுக்கல் (சேர்கார்- ரூ.1,105, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.2,110),* எழும்பூர் - மதுரை (சேர்கார்- ரூ.1,200, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.2,295),* எழும்பூர் - கோவில்பட்டி (சேர்கார்- ரூ.1,350, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.2,620),* எழும்பூர் - நெல்லை (சேர்கார்- ரூ.1,665, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.3,055),* எழும்பூர் - நாகர்கோவில் (சேர்கார்- ரூ.1,760, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.3,240),* நாகர்கோவில் - நெல்லை (சேர்கார்- ரூ.440, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.830),* நாகர்கோவில் - கோவில்பட்டி (சேர்கார்- ரூ.515, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.985),* நாகர்கோவில் - மதுரை (சேர்கார்- ரூ.735, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,405),* நாகர்கோவில் - திண்டுக்கல் (சேர்கார்- ரூ.850, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,635),* நாகர்கோவில் - திருச்சி (சேர்கார்- ரூ.1,000, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.1,945),* நாகர்கோவில் - விழுப்புரம் (சேர்கார்- ரூ.1,510, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.2,775)* நாகர்கோவில் - தாம்பரம் (சேர்கார்- ரூ.1,700, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.3,175)* நாகர்கோவில் - எழும்பூர் (சேர்கார்- ரூ.1,735, எக்சிகியூட்டிவ் சேர்கார் ரூ.3,220)

வந்தே பாரத்தில் படுக்கை வசதி

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வந்தே பாரத் ரயில் சேவையால் தொழில்கள் வளரும், வேலைவாய்ப்புகள் பெருகும். தமிழகத்தின் கோவில் நகரான மதுரையும், ஐ.டி., நகரான பெங்களூரையும் புதிய சேவை இணைக்கிறது. விரைவில் படுக்கை வசதி, புதிய வழித்தடங்கள், ரயில் சேவைகள் உருவாக்கப்படும். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வந்தே பாரத் ரயில்களின் சேவை உதவும். தமிழகத்தில் ஏற்கனவே 6 வந்தே பாரத் ரயில்களுடன் தற்போது 2 புதிய வந்தே ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். வந்தே பாரத் ரயில்கள் நின்று செல்லும் வகையில் சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Saai Sundharamurthy AVK
ஆக 31, 2024 23:54

நாட்டின் வளர்ச்சியில் நிச்சயம் மாற்றம், நவீனம் என்பது வரவேற்க கூடியதே !


sivansakthi
ஆக 31, 2024 19:24

நான் நேற்று பெங்களூர் இருந்து கோவை வரை வந்தே பாரத் இரயிலில் பயணம் செய்தேன், செய்தித்தாள், டீ, காபி, தின்பண்டம், தண்ணீர் பாட்டில், இரவு உணவுடன் ஐஸ்கிரீம், ஆகா என்ன ஒரு சுகம் இதில் பயணிக்கும் போது, நமக்கு விமானத்தில் பயணம் செய்த அனுபம் போன்று இருக்கும். காசுக்கு ஏற்ற பணியராம் என்று சொல்வார்கள். ஒரு குறையும் இல்லை, நன்றி இந்தியன் இரயில்வே துறைக்கு.


Chakkaravarthi Sk
ஆக 31, 2024 19:23

அதற்காக தானே ஒவ்வோர் தேர்தலிலும் வாக்கு செலுத்தாமல் தமிழன் இருக்கிறான். இனிமேலும் அப்படியே இருக்கும். வாக்கும் கிடையாது சலுகையும் கிடைக்காது. 2029, 2034, 2039 என்று வரும் 15 வருடங்களுக்கு இதையே தமிழன் செய்வான். அவர்களும் செய்வார்கள். இது மாறாது.


RAAJ68
ஆக 31, 2024 18:02

சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்படும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மிக கேவலமாக உள்ளன. அழுக்கு பிடித்த பெட்டிகள் துருப்பிடித்த பெட்டிகள் கழிவறைகளின் செயல்படாத குழாய்கள் சரியாக மூடமுடியாத ஜன்னல் கதவுகள் தண்ணீர் வராத கழிவறைகள் இவைகளுக்கெல்லாம் எப்போது விடிவு காலம் என்று தான் கேட்கிறோம். ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் செலவில் குறைந்தது 15 சாதாரண ரயில் பெட்டிகள் தயாரித்து துருப்பிடித்த பெட்டிகளை மாற்றலாமே. விரைவாக செல்ல வேண்டும் ஏசி வசதி வேண்டும் நெரிசல் இருக்கக் கூடாது என்று ஒரு சில ஆடம்பர வாதிகள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு வியர்வை வரக்கூடாது சட்டையில் அழுக்கப்படக்கூடாது கார் சும்மா இருக்கும்போதும் ஏசியை இயக்க விட்டு உட்கார்ந்திருப்பார்கள். இவர்கள் விரும்பும் வசதிக்காக பாமரன் சாக்கடையில் கிடக்க வேண்டுமா. காசு கொழுத்து இருப்பவர்கள் தான் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு 500 ரூபாய் கொடுத்துவிட்டு வருவான். பாமரனுக்கு சாலையோர தள்ளுவண்டி ஹோட்டல்கள் தான். அவரே ஒத்துக் கொள்கிறார் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும் வர்க்கம் தான் வந்தே பாரத்தில் செல்ல முடியும் என்று.


Pandi Muni
செப் 01, 2024 21:15

கூலி தொழிலாளி தினம் 1000 ரூபாய் சம்பாதிக்கிறான் 600 ரூபாய்க்கு டஸ்மாகில் வாங்கி குடிக்கிறான் அவனுக்கு அதுவே பேரானந்தம் கழிவறையில் பயணம் செய்வது ஒன்றும் பெரிதல்ல


venugopal s
ஆக 31, 2024 17:55

மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேலம் வரை நல்ல வேகம், ஆனால் சேலம் பெங்களூர் போவதற்கும் வருவதற்கும் மூன்றரை மணி நேரம் அதிகமாக உள்ளது.


Jysenn
ஆக 31, 2024 17:30

A sadist snatched away the concession given to the seniors in railway booking. It must be restored.


அசோகன்
ஆக 31, 2024 17:29

மக்களுக்கு வந்தே பாரத்..... மோடிஜிக்கு நன்றி ???


panneer selvam
ஆக 31, 2024 17:27

it is mainly to discourage short distance travelers


Saai Sundharamurthy AVK
ஆக 31, 2024 16:54

நெரிசல் இருக்க கூடாது. விரைவாக போக வேண்டும். பயண நேரம் குறைய வேண்டும். இடை நிறுத்தம் அதிகம் இருக்க கூடாது. இருக்கைகள் வசதியாக இருக்க வேண்டும். வசதியாக பயணம் செய்ய வேண்டும். குளுகுளு வசதி வேண்டும். வெளிநாட்டில் பயணம் செய்வது போல் இருக்க வேண்டும். அப்படியானால், கட்டணம் அதிகமாகத் தான் இருக்கும். வசதி உள்ளவர்கள் இந்த ரயிலில் பயணம் செய்து விடுவதால், குறைந்த கட்டணத்தில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு வைகை, பல்லவன் மற்றும் இரவு நேர ரயில்களில் எளிதாக இடம் கிடைத்து வருகிறது. நல்ல விஷயம் தான். சாதாரண ஓட்டலுக்கும், நட்சத்திர ஹோட்டலுக்கும் உள்ள வேறுபாடு போன்றது தான் ரயில் பயணமும் என்பதை உணர வேண்டும்.


குரு, நெல்லை
ஆக 31, 2024 16:10

ஆட்டோகாரார்கள் வசூலிக்கும் தொகையை எவரும் இங்கே குறிப்பிட மாட்டார்கள். 3 km 200 ரூபாய். அதனை எவனும் தட்டி கேட்க துப்பில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை