| ADDED : மே 30, 2024 09:58 PM
கார்வார், - மஹாபலேஸ்வர் கோவிலின் நுழைவுவாயில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பக்தர்கள் பீதியுடன் சென்று வருகின்றனர்.உத்தர கன்னடா மாவட்டம், கும்டா தாலுகா கோகர்ணாவில் மஹாபலேஸ்வர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, கர்நாடகாவின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.இந்நிலையில், கோவிலின் தெற்கு நுழைவு வாயில் சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவில் சுவரும் சேதம் அடைந்து இருக்கிறது. கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள், நுழைவுவாயில் இடிந்து விழுந்து விடுமோ என்று, அச்சத்துடன் செல்கின்றனர்.'சிவலிங்கத்தை தரிசிக்க தெற்கு வாசல் வழியாக சென்றால், புண்ணியம் கிடைக்கும் என கருதுவதால், தெற்கு வாசல் வழியாக வருகிறோம். ஆனால் நுழைவுவாயில் இடிந்து விழும் நிலையில் இருப்பதை பார்த்து, மனதிற்கு கஷ்டமாக உள்ளது' என்று, பக்தர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.