உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹதாயி திட்டத்தில் விதிமுறை மீறவில்லை! கர்நாடகாவுக்கு ஆதரவாக அறிக்கை தாக்கல்

மஹதாயி திட்டத்தில் விதிமுறை மீறவில்லை! கர்நாடகாவுக்கு ஆதரவாக அறிக்கை தாக்கல்

பெங்களூரு : 'கர்நாடகாவின் பெலகாவி, ஹூப்பள்ளி - தார்வாட், கதக் ஆகிய மாவட்டங்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வினியோகிக்கும் மஹதாயி திட்டத்தில், சட்டவிதிமுறைகள் மீறப்படவில்லை' என, மத்திய வெள்ள தடுப்பு கமிட்டி அறிக்கை அளித்துள்ளது.கோவா மாநிலத்தில் உருவாகி, கர்நாடகாவில் பாயும் மஹதாயி நதி நீரில், தனக்கு கிடைக்கும் பங்கை பயன்படுத்தி, வறட்சி பாதிப்பு மாவட்டங்களுக்கு, குடிநீர் வினியோகிக்கும் நோக்கில் மஹதாயி திட்டத்தை கர்நாடக அரசு வகுத்துள்ளது.கலசா, பன்டூரி கால்வாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு வருவது, அரசின் எண்ணமாகும். இதற்கு கோவா அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.கர்நாடகா அரசின் திட்டம் சட்டவிரோதமானது. இதனால் தங்கள் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என, காரணம் கூறுகிறது. திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளை ஆய்வு செய்யும்படி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.எனவே ஆய்வு செய்யும்படி உயர் அதிகாரிகளுக்கு, மத்திய ஜலசக்தி ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி ஜூலை 7ல், பெலகாவி, கானாபுராவின் கனகும்பி உட்பட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர்.இதையடுத்து மத்திய ஜலசக்தி ஆணையத்துக்கு உயர் அதிகாரிகள் அளித்த அறிக்கை:கர்நாடக அரசு எந்த விதத்திலும், சட்டங்களை மீறவில்லை. விதிகளின்படியே பணிகள் நடக்கின்றன. கோவா அரசு குற்றஞ்சாட்டியதை போன்று, சட்டவிரோதமாக கர்நாடக அரசு எதையும் செய்யவில்லை. ஆய்வு நடந்த போது, கோவா பொறியாளர்களும் உடன் இருந்தனர்.அவர்களும் பணிகளில் விதிமீறல் நடக்கவில்லை என, திருப்தி தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை, கர்நாடக அரசு பின்பற்றியுள்ளது.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி