உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மொத்தமா டேமேஜ் பண்ணிட்டாங்க; புனே போராட்டத்தில் சரத் பவார் குமுறல்

மொத்தமா டேமேஜ் பண்ணிட்டாங்க; புனே போராட்டத்தில் சரத் பவார் குமுறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: பத்லாபூரில், இரண்டு சிறுமியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில், நாட்டில் மஹாராஷ்டிராவுக்கு இருந்த பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என மஹாராஷ்டிரவின் மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்., (பவார்) கட்சி தலைவருமான சரத்பவார் தெரிவித்தார்.மஹாராஷ்டிரா தானே அருகே பத்லபூர் மழலையர் பள்ளி ஒன்றில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதையறிந்த ஊர் மக்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை சூறையாடிய அவர்கள். பத்லபூர் ரயில் நிலையத்தில் கலவரம் செய்தனர்; ரயில் சேவையே ஸ்தம்பித்தது.

மவுனப் போராட்டம்

இந்நிலையில், இளம் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புனேயில் நடந்த மவுனப் போராட்டத்தில் சரத்பவார்,உத்தவ் தாக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது சரத்பவார் பேசியதாவது: பெண்களின் பாதுகாப்பிற்கும் மாநில அரசு பொறுப்பு என்பதை மஹாராஷ்டிரா அரசு மறந்துவிட்டது. பத்லாபூர் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக நினைத்தால், அரசு உணர்வற்றதாக உள்ளது. முந்தைய காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் கைகளை வெட்டிய சத்ரபதி சிவாஜியின் நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.

கொடுமைகள்

லோக்சபா எம்.பி.,யும், சரத்பவார் மகளுமான சுப்ரியா சுலே பேசியதாவது: மஹா.,வில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம். போலீசாரை கண்டு குற்றவாளிகள் பயப்படுவது இல்லை. நான் இந்த அரசை கண்டிக்கிறேன். பத்லாம்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளிமாநிலத்தவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

bgm
ஆக 24, 2024 19:09

மகா கட்டுமரம் கல்கத்தா சம்பவம் குறித்து ஒண்ணுமே சொல்லல. தீ தீ பற்றி பயம்


Anbuselvan
ஆக 24, 2024 15:20

ஏன் மகாராஷ்டிராலே மட்டும்தானா? உங்களது கூட்டணி காட்சிகள் உள்ள மாநிலங்களில் நடக்கலையா?


Sridhar
ஆக 24, 2024 14:46

என்னென்னமோ செஞ்சு நாமளும் தேர்தல்ல ஜெயிச்சிடமாட்டோமான்னு அலையுதுங்க


சமூக நல விரும்பி
ஆக 24, 2024 14:38

சம்பந்த பட்ட மனித மிருகங்கள் உடனடியாக தூக்கில் ஏற்ற படவேண்டும். இல்லாவிடில் இப்படி தினமும் நடப்பதை தடுக்க முடியாது.


ஆரூர் ரங்
ஆக 24, 2024 14:27

இதே ஆளின் கூட்டணி ஆட்சியில்தான் இரு அப்பாவி சன்னியாசிகள் அடித்துக் கொலை செய்யபட்டனர். ஜல்கான் பகுதியில் நிறைய இளம் பெண்கள் பாலியல் வல்லுறவு, கட்டாய விபசாரம் மூலம் காங்கிரஸ் தொடர்புள்ள கும்பலால் சீரழிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. ஆக தேர்தல் நெருங்குவதற்கும் இவர்களது பாலியல் குற்றச்சாட்டு நாடகங்களுக்கும் தொடர்பிருக்கிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 24, 2024 15:21

அது மட்டுமல்ல ..... அநாதை சிறுமிகளை பராமரித்த ஒரு இயக்கம் நட்ச்த்திய பள்ளியில் சிறுமிகளை வன்புணர்வு செய்தது மட்டுமல்லாமல் நாயின் கழிவை உண்ண வைத்த கொடுமையும் இவர்கள் கூட்டணி ஆட்சியில் நடந்தது ...


தத்வமசி
ஆக 24, 2024 14:25

சிறுமியரை பலாத்காரம் செய்தவரை சட்டம் பார்த்துக் கொள்ளும். இந்த டிராமா கம்பெனி எதற்கு கதற வேண்டும் ? இவர்களின் துணையோடு ஆட்சி செய்த உத்தவ் தாக்கரே காலத்தில் காவல்துறையின் கண் எதிரே கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு இந்து சன்யாசிகளைப் பற்றி இந்த டிராமா கம்பெனி ஆட்கள் ஏதாவது பேசினார்களா ? இல்லையே.


Nandakumar Naidu.
ஆக 24, 2024 14:09

இவர்கள் ஆட்சியில் நடந்த குற்ற வழக்கு என்ன கிழித்தார்கள்? திஷா சாலியான், சுஷாந் சிங் ராஜ்புத் இவர்களின் கொடூர கொலைகளை மண் போட்டு மூடி மறைத்தீர்கள் அல்லவா, இந்த கொலைகளை கண்டுபிடிக்க என்ன கிழித்தீர்கள். குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். உங்களுக்கெல்லாம் போராட்டம் நடத்த தகுதி இருக்கிறதா?


முக்கிய வீடியோ