உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுடன் வலுவான உறவு: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திடீர் ஐஸ்

இந்தியாவுடன் வலுவான உறவு: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திடீர் ஐஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இரு தரப்பு உறவை கொண்டுள்ளது. விரைவில் இந்தியாவுக்கு வர திட்டுமிட்டுள்ளேன்' என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்தார்.அண்டை நாடான மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. சீனாவுடன் நட்புறவு பாராட்டிய அவர், இந்திய விரோத செயல்பாடுகளை அதிகப்படுத்தினார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றினார். அவரது செயல்பாடுகளாலும், இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரசாரத்தாலும், அங்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cco3hw6t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அன்றாட வருவாய்க்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி இருந்த மாலத்தீவுகள், இதனால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் உதவியை மாலத்தீவு நாடியது. இதனை ஏற்றுக்கொண்ட இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் வழங்கப்படும் 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்தது. இந்த நிலையில் தான் மாலத்தீவு அதிபர் முகமது இந்தியாவின் உறவை வலுப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்.

அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இருதரப்பு உறவை கொண்டுள்ளது. விரைவில் இந்தியாவுக்கு வர திட்டுமிட்டுள்ளேன். மாலத்தீவுக்கு இந்தியாவுடன் எந்த பிரச்னையும் இல்லை. மாலத்தீவு மக்கள் வெளிநாட்டு ராணுவத்தினர் முகாமிட்டு இருப்பதை விரும்பவில்லை. இதனால் தான் இந்திய ராணுவத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்றினோம். இதனால் நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை என்றார்.கடந்த ஜூன் 9ம் தேதி பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க புதுடில்லி வந்த, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அவர், டில்லியில் அக்டோபர் 7ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
செப் 28, 2024 17:15

நட்பு நாடுகளான மாலத்தீவு, பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கு எவ்வளவு கேட்டாலும் மத்திய பாஜக அரசு கொடுப்பார்கள்.எதிரி நாடு தமிழ்நாடு மட்டுமே, ஒன்றும் கொடுக்க மாட்டார்கள்!


Lion Drsekar
செப் 28, 2024 14:54

காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் சிலர் விவாகரத்து செல்லும் இந்த காலகட்டத்தில் நம் நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, வெற்றியும் பெற்றும் நம் எதிரி நாடுகளுடன் வாழ்ந்து வந்த இவர் தற்போது உறவு கொள்ள விரும்புகிறார் என்றால் ? இங்கு ஒரு கட்சிக்கு எதிராக பல கட்சிகள் என ஊருக்கு ஊர் ஒரு கட்சி தொடங்கி , தற்போது தேர்தல் என்று வந்தவுடன் தங்களது கொள்கைகள், தங்களுக்காக தீ குளித்தவர்கள் என்று எதையுமே நினைக்காமல் கூட்டு சேர்ந்து கூட்டு சேர்ந்து , மக்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயல்படுகிறார்களோ அதேபோல்தான் இன்று உலகம் முழுவதுமே இருக்கிறது, வாழ்க இவ்வையகம், வந்தே மாதரம்


venugopal s
செப் 28, 2024 11:45

கவலைப்படாதீர்கள், நீங்கள் எவ்வளவு நிதி கேட்டாலும் எங்கள் மத்திய பாஜக அரசு உடனே கொடுப்பார்கள், திருப்பிக் கூடத் தரவேண்டாம். மாநில அரசுகள் நிதி கேட்டால் மட்டும் தான் கொடுக்க மாட்டார்கள்.


Barakat Ali
செப் 28, 2024 13:47

முகமது முய்சு தேச துரோகி அல்ல ........ ஆனால் திராவிட மாடல் ???? முய்சு வெளிப்படையாகவே இந்தியாவை எதிர்த்தவர் ...... ஆனால் திராவிட மாடல் ????


Rasheel
செப் 28, 2024 10:49

பாம்புகளுக்கு பால் வார்ப்பது தனக்கு விஷம் வைப்பது போல் ஆகும். அதை தான் 1000 ம் ஆண்டு இந்திய வரலாறு சொல்கிறது.


Anonymous
செப் 28, 2024 11:10

ஆனாலும் இந்தியா கற்றுக் தெரியவில்லை


chennai sivakumar
செப் 28, 2024 10:23

உண்மை. அவர்களது இன்னொரு முகம் தெரிந்த பின்னர் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நமக்கு பாதுகாப்பு


rasaa
செப் 28, 2024 10:22

இவரை துளியும் நம்பக்கூடாது.


Indhuindian
செப் 28, 2024 10:10

Don't trust these sort of guys They are proverbial Snake in the grass


Barakat Ali
செப் 28, 2024 10:04

இனிமே .... மாலத்தீவு அதிபர் வாக்குறுதி ......


கிஜன்
செப் 28, 2024 09:57

உறவுக்கு கை கொடுப்போம் ....


gvr
செப் 28, 2024 09:40

These snakes can never be trusted.


சமீபத்திய செய்தி