உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; 2 பேர் பலி;9 பேர் காயம்

மீண்டும் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; 2 பேர் பலி;9 பேர் காயம்

இம்பால்: கடந்த சில நாட்களாக எந்த பிரச்னையும் இல்லாமல் ஓய்ந்திருந்த மணிப்பூரில் மீண்டும் படுகொலை சம்பவம் துவங்கி உள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. தொடர்ந்து நடந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சில தினங்களாக எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி அமைதியாக இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று (ஆக.,31) மாநில பா.ஜ,. செய்தி தொடர்பாளர் வீ்டு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று செப்.,01-ம் தேதி தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் தெரிவித்து இருப்பதாவது: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 வயது மதிக்கத்ததக்க பெண் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். மேலும் அவரது எட்டு வயது மகள், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சம்பவம் நடந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kulandai kannan
செப் 01, 2024 23:50

மிஷநரிகளின் விஷமம். செய்தி இன மக்களும் பழங்குடியினர் தான் என்று நீதிமன்றம் கூறினால், குக்கி இன மக்களுக்கு (பெரும்பாலும் கன்வர்டுகள்) என்ன பிரச்சினை?


அப்பாவி
செப் 01, 2024 21:41

அதான் 2047 க்குள்ளாற மணிப்பூரை அமைதிப் பூங்காவாக்குடுவோம்னு. அப்போ ஜீ வந்து பேசுவார்.


ramesh
செப் 01, 2024 20:31

கார் ரேஸ்க்கு கருத்து போட்டவர்களில் ஒருத்தரை கூட இங்கே காணுமே


nagendhiran
செப் 01, 2024 20:27

நடக்கவிருக்கும் தேர்தல் வரை கலவரம் நடக்கும்? அப்பதான் இந்தி கூட்டணி ஆட்சிக்கு வரும்ல?


ديفيد رافائيل
செப் 01, 2024 20:12

வன்முறை நாடாக மாறிடுச்சோ


கோவிந்தராச
செப் 01, 2024 19:54

ராணுவத்த அனுப்பி முளையிலே கிள்ளி எறியனும் ஆனா இந்த அரசு செய்யாது


m.n.balasubramani
செப் 01, 2024 20:27

இதுவரை எந்த அரசும் செய்யல ஏன் இவங்க பொறுமையா இருகாங்க தெரியல பிரதர்


முக்கிய வீடியோ