உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ தளவாடங்கள் 85 நாடுகளுக்கு ஏற்றுமதி: 30 மடங்கு அதிகரிப்பு

ராணுவ தளவாடங்கள் 85 நாடுகளுக்கு ஏற்றுமதி: 30 மடங்கு அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ராணுவ தளவாடங்களை 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் 10 ஆண்டுகளில் 30 மடங்கு அதிகரித்துள்ளது என இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.பாதுகாப்புத்துறை தெரிவித்து இருப்பதாவது: கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் இந்திய ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.686 கோடியாக இருந்தது. தற்போது 2023-24- ம் நிதியாண்டில் ரூ.21,083 ஆக அதிகரித்து உள்ளது. இது 30 மடங்கு அதிகரிப்பாகும். நாட்டின் பாதுகாப்புத்துறை வடிவமைப்புகள் மற்றும் மேம்பாட்டு திறனை வெளிப்படுத்தி உள்ளன. இதன் காரணாக தென்கிழக்கு ஆசியா, மத்தியகிழக்கு, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. ஏவுகணைகள், ரேடார்கள், கடற்படை அமைப்புகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவை ஏற்றுமதியில் இடம்பெற்றுள்ள முக்கிய கருவிகளாகும். ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் சமீபத்தில் வாங்கி உள்ளது மற்றொரு பெரிய சாதனையாக உள்ளது.ஏற்றுமதி சந்தையை பூர்த்தி செய்வதில் கடற்படை அமைப்புகளும் முக்கிய பங்கு கொண்டு உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் போன்ற மேம்பட்ட தளங்கள் இந்த பிரிவில் சாதனையை எடுத்துக்காட்டுகின்றன. 2023-24ல் உற்பத்தியின் மொத்த மதிப்பில், சுமார் 79.2 சதவீதம் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 20.8 சதவீதம் தனியார் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.லார்சன் & டூப்ரோ, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ் போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் தனியார் துறைகளில் முக்கியமானவையாக உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது மற்றும் 'மேக் இன் இந்தியா' போன்ற பல கொள்கை முயற்சிகளை அரசு எடுத்துள்ளதும் ஏற்றுமதி அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

baskaran s
ஜூலை 16, 2024 12:21

Yes very good news


venugopal s
ஜூலை 15, 2024 08:29

இந்த மாதிரி தனியார் மயமாக்கல் திட்டங்களை எல்லாம் நாங்கள் முப்பது வருடங்களுக்கு முன்பே நரசிம்ம ராவ் காலத்திலேயே செய்து விட்டோம். அதன் தொடர்ச்சி தான் இதெல்லாம்!


ஆரூர் ரங்
ஜூலை 15, 2024 14:04

அதற்கு முன் 1990 வரை நாற்பது ஆண்டுகள் தனியார் தொழில் துவங்குவதற்கே இடைஞ்சலாக இருந்தது அதே காங்கிரசின் சோஸலிசம். இப்போது PSU தனியார்மயமாக்கலை அதே காங்கிரசை எதிர்க்கிற நாடகம்.


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 15, 2024 15:42

ஏலே வேணு ஏன் இப்படி திமுகவிற்கும் கொடுக்கிறார்கள் திருந்தவே மாட்டீங்க


Visu
ஜூலை 14, 2024 23:02

100% true ஆனால் தமிழ்குடிகளுக்கு புரியுமா


அப்புசாமி
ஜூலை 14, 2024 22:29

இது போருக்கான டைம்.இல்லை ஹைன். தளவாடம் விற்பதற்கான டைம் ஹைன். வித்ததுக்கப்புறம் அவிங்களே போர் தொடங்குடுவாங்க ஹைன்.


N Sasikumar Yadhav
ஜூலை 14, 2024 22:50

இறக்குமதி செய்யும்போது இனித்ததா குப்பசாம் . நமது நாடு பொருளாதார வளர்ச்சியடைவது சில அந்நிய நாட்டு கைக்கூலிகளுக்கு பிடிக்கவில்லை


Dharmavaan
ஜூலை 15, 2024 07:27

அறிவிலி தேசத்ரோகி


hari
ஜூலை 15, 2024 07:57

200 ரூபாய் வாங்கிட்டு டாஸ்மாக் ஓடுஙக ஹைன்.....கொஞ்சம் கருத்தோட கமெண்ட் போடுங்க கோவாலு ஹைன்...


hari
ஜூலை 15, 2024 07:59

ஒருTMC தண்ணி வாங்க வக்கில்லை அப்புசாமி..... இதுல உன் மொக்கை கமெண்ட் வேற....


subramanian
ஜூலை 14, 2024 22:09

அறுபது ஆண்டுகளில் இந்திரா காங்கிரஸ் நாட்டை சுடுகாடாக ஆக்கி வைத்து விட்டு போனது. பத்து ஆண்டுகளில் உலக நாடுகள் அனைத்தும் ஆச்சர்யம் படுகின்ற அளவில் மோடி உயர்த்தி உள்ளார்.


lana
ஜூலை 14, 2024 22:09

வாழ்க வளர்க. இது போன்ற ஆக்கபூர்வமாக வளர்ச்சி வேண்டும். அதை விடுத்து oc குடுப்பாங்க இலவசத்துக்கு மயங்கினார் கள் எனில் 100 பிடுங்கி 50 ரூபாய் தான் இலவசத்துக்கு கிடைக்கும். மீதி இவர்கள் சம்பளமாக மற்றும் அரசியல் வியாதிகள் கொள்ளை அடிக்க மட்டும்தான் உதவும்


subramanian
ஜூலை 14, 2024 22:05

மோடியை எதிர்ப்பவர்கள் எங்க போனீங்க ? நவதுவாரமும் எரியுதா? போங்க தேசத்துரோகிகளா....


Dharmavaan
ஜூலை 14, 2024 21:29

இதையெல்லாம் பொது கூட்டத்தில் வெளியிடப்பட வேண்டும் .பாஜகவிற்கு விளம்பர திறமை போதவில்லை.இந்நேரம் ஸ்டாலினா இருந்தால் பெரிய விழா கொண்டாடி இருப்பார்.


N Sasikumar Yadhav
ஜூலை 14, 2024 22:50

உண்மையான கருத்து


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை