உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக தொகுதிகளில் வெற்றி அமைச்சர் பரமேஸ்வர் நம்பிக்கை

அதிக தொகுதிகளில் வெற்றி அமைச்சர் பரமேஸ்வர் நம்பிக்கை

துமகூரு: ''லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும், 14 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.துமகூரில் நேற்று அவர் கூறியதாவது:கர்நாடகாவின், 14 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட ஓட்டுப்பதிவில், காங்கிரஸ் வெற்றி பெறும். நாட்டின் ஒவ்வொரு நிலவரங்கள், விஷயங்களை மக்கள் கவனிக்கின்றனர். நாட்டில் கூட்டமைப்பு நடைமுறைக்கு, மத்திய அரசு எப்படி பாதிப்பை கொண்டு வந்துள்ளது என்பதை பார்த்துள்ளனர்.மாநிலத்துக்கு வழங்க வேண்டிய, வறட்சி நிவாரண நிதியை வழங்க மத்திய அரசால் முடிய வில்லை. இம்முறை லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ்அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்