உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழையால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் சர்வீஸ் சாலையில் சென்ற அமைச்சர் பரமேஸ்வர்

மழையால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் சர்வீஸ் சாலையில் சென்ற அமைச்சர் பரமேஸ்வர்

நெலமங்களா: மழைநீர் தேங்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள், சர்வீஸ் சாலையில் சென்றன.பெங்களூரு நகர பகுதியிலும், புறநகரிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், துமகூரு செல்லும் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. இதனால், நெலமங்களாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன.இதற்கிடையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் இருந்து துமகூருக்கு நேற்று புறப்பட்டார். அப்போது நெலமங்களா அருகில் அவரது வாகனம், பாதுகாப்பு வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டன.பாதுகாப்பு அதிகாரிகள், காரில் இருந்து இறங்கி, வாகனங்களை அப்புறப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை. உள்துறை அமைச்சர் வருவதை, 'வாக்கி டாக்கி' மூலம் அறிந்த போக்குவரத்து போலீசார் ஓடோடி வந்தனர்.அவர்களை அழைத்த அமைச்சர், 'போக்குவரத்தை சீர் செய்யாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்ன தான் பிரச்னை? உடனே சரி செய்யுங்கள்' என, நடுரோட்டிலேயே கோபமாக கூறினார்.இதனால், மற்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. வாகன ஓட்டிகள் கடும் விரக்தி அடைந்தனர். போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்வதற்கு பதிலாக, சர்வீஸ் சாலையில் அமைச்சர் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை