மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
2 hour(s) ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
3 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
4 hour(s) ago
பெங்களூரு சென்ட்ரல் லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராள மன்சூர் அலிகான் களமிறங்கியுள்ளார். ஆனால், இவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.,க்களோ ஆர்வம் காண்பிக்கவில்லை.பெங்களூரு சென்ட்ரல் லோக்சபா தொகுதியில், பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகம். இம்முறையும் இன்னாள் எம்.பி., மோகன், பா.ஜ., வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரை எதிர்த்து மன்சூர் அலிகானை, காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. பிரசாரத்தை துவக்கவில்லை
தொகுதியில் இவர் மட்டுமே, தன் ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்கிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவோ, பணியாற்றவோ அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை. பிரசாரத்துக்கு வாருங்கள் என, மன்சூர் அலிகான் மன்றாடுகிறார். சமீபத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் கூட்டம் நடந்தது. இதில் ஜமீர் அகமதுகான், ரிஸ்வான் ஹர்ஷத் மட்டுமே பங்கேற்றனர். மற்ற சிறுபான்மை சமுதாய எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கவில்லை.பிரசார திட்டங்கள் வகுப்பது தொடர்பாக, சட்டசபை தொகுதி வாரியாக கூட்டம் நடத்த வேண்டும். நான்கு தொகுதிகளில் மட்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.,க்களின் ஆர்வமின்மையால் கூட்டம் நடக்கவில்லை.சாந்திநகர் எம்.எல்.ஏ., ஹாரிஸ், கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகானுக்கு ஆதரவாக பிரசாரத்தை துவக்கவில்லை. இது குறித்து, அமைச்சர் ஜமீர் அகமதுகானும் அதிருப்தி தெரிவித்துள்ளார். 'சிறுபான்மையினருக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. பிரபலமான பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில், சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சீட் கிடைத்துள்ளது. இந்த தொகுதியிலாவது, பிரசாரம் செய்யாவிட்டால் எப்படி' என, வருத்தம் தெரிவித்து உள்ளார்.கடந்த 2008ல் தொகுதிகள் பிரித்த போது, பெங்களூரு சென்ட்ரல் தொகுதி உருவானது. பெங்களூரு வடக்கு மற்றும் தெற்கு தொகுதியில் இருந்து, சில தொகுதிகளை சேர்த்து பெங்களூரு சென்ட்ரல் தொகுதியானது. கடந்த 2009ல் நடந்த முதல் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாங்க்லியானாவை, பா.ஜ.,வின் மோகன் 35,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.அதன்பின் 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக இருந்த ரிஸ்வான் ஹர்ஷத்தை, பா.ஜ.,வின் மோகன் தோற்கடித்து வெற்றி கொடி நாட்டினார். இம்முறையும் தனக்கே வெற்றி என்ற நம்பிக்கையில், மோகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வெற்றி பெறுவது கஷ்டம்
தொகுதியில் பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் ஓட்டு வங்கி உள்ளது. இதை காங்கிரசுக்கு திருப்புவது கஷ்டம் என, எம்.எல்.ஏ.,க்கள் கருதுகின்றனர். யுத்தத்துக்கு முன்பே ஆயுதத்தை கீழே போட்டதை போன்று, மன்சூர் அலிகான் வெற்றி பெறுவது கஷ்டம். இவருக்கு ஆதரவாக பணியாற்றுவது வீண் வேலை என, கருதி காங்., எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயங்குவதாக கூறப்படுகிறது.ஆனால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், மன்சூர் அலிகான் பிரசாரம் செய்கிறார். தனக்காக தொகுதியில் பிரசாரம் செய்ய வாருங்கள் என, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் மன்றாடுகிறார். ஆயினும், அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை- நமது நிருபர் -.
2 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago