உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராகிறார் ஜி.டி.தேவகவுடா?

ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராகிறார் ஜி.டி.தேவகவுடா?

பெங்களூரு: குமாரசாமியால் காலியான ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் பதவியில், மூத்த எம்.எல்.ஏ.,வான ஜி.டி.தேவகவுடா நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபா தேர்தலில் குமாரசாமி வெற்றி பெற்று, மத்திய அமைச்சரும் ஆகி விட்டதால், சென்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இவர் வகித்த ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை குழு தலைவர் பதவியும் காலியாக உள்ளது.இந்த பதவிக்கு புதியவரை நியமிப்பது குறித்து, கட்சியில் ஆலோசனை நடக்கிறது. இப்பதவிக்கு ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜி.டி. தேவகவுடா பெயர் ஆலோசிக்கப்படுகிறது.ஜூலை 15 முதல், சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. அதற்குள் எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவரை நியமிக்க வேண்டும். ஜூலை 8 அல்லது 9ல், ஆலோசனை நடக்கும். அதில் எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை குழு தலைவர் பதவி குறித்து, முடிவு செய்யப்பட உள்ளது.இந்த பதவிக்கு ரேவண்ணா, வெங்கடஷிவா ரெட்டி, நேமிராஜ நாயக், சுரேஷ் பாபு ஆகியோரும் பரிசீலிக்கப்படுகின்றனர். ஆனால் ஜி.டி.தேவகவுடாவின் பெயர் முன்னிலையில் உள்ளது. கட்சி மேலிடமும் இவரையே, அந்த பதவியில் அமர்த்த விரும்புவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை