உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவகுமார் மீது ம.ஜ.த., பாய்ச்சல்

சிவகுமார் மீது ம.ஜ.த., பாய்ச்சல்

பெங்களூரு, : 'கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரே, பென்டிரைவ் பேக்டரி உரிமையாளர்' என ம.ஜ.த., குற்றம் சாட்டியுள்ளது.'ஹாசன் எம்.பி., பிரஜ்வல்லின் பென்டிரைவ் வெளியிட்ட பின்னணியில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா உள்ளனர். இதை வெளியிட 100 கோடி ரூபாய் டீல் பேசினர்' என, பா.ஜ., வக்கீல் தேவராஜேகவுடா குற்றம் சாட்டினார். ஆனால் இதை இருவருமே மறுத்தனர். இந்நிலையில் சிவராமேகவுடா மற்றும் தேவராஜேகவுடா இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல் ஆடியோ, நேற்று திடீரென வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ம.ஜ.த., கூறியதாவது:கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமாரே, பென்டிரைவ் பேக்டரியின் உண்மையான முதலாளி. இப்போது யார் மென்டல் என, கூறுங்கள். சதி திட்டம் தீட்டிய, காங்கிரசின் முகமூடி கழன்று, உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பென்டிரைவ் பரவியதில், காங்கிரசாரின் சதி அடங்கியுள்ளதாக தேவராஜே கவுடா கூறியதற்கு, தற்போது வெளியான ஆடியோ உரையாடல்களே, ஆதாரமாக உள்ளன.பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவப்பெயரை ஏற்படுத்துவது; முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தலைமைக்கு களங்கம் ஏற்படுத்துவது; பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியை முறிப்பது மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் உயிரை பறிக்கவும் காங்கிரஸ் முயற்சிக்கிறது.பென்டிரைவ் சதியை செயல்படுத்த, சிவகுமார் 100 கோடி ரூபாய் டீல் பேசியுள்ளார். பென் டிரைவை குமாரசாமியே பரப்பியதாக கூறுவதற்கு, வக்கீல் தேவராஜே கவுடாவுக்கு 100 கோடி ரூபாய் பேரம் பேசி உள்ளனர். முன் பணமாக 5 கோடி ரூபாயை, பவுரிங் கிளப்பின் அறை எண் 110 க்கு அனுப்பி உள்ளார்.ஆபாச வீடியோவை தயாரித்ததே, சிவகுமார்தான். இந்த சதியை செயல்படுத்த நான்கு முக்கிய அமைச்சர்கள் கொண்ட கமிட்டி அமைத்ததே, சிவகுமார்தான்.வக்கீல் தேவராஜே கவுடா வெளிப்படுத்திய உண்மைகள், ஆடியோ டேப்புகள், வரலாற்று பிரசித்தி பெற காங்கிரசின் மானத்தை, வீதியில் ஏலம் விட்டுள்ளன. அடுத்தவர் வீட்டுக்கு கெடுதல் செய்யும், காங்கிரசாரின் மனநிலையை கண்டிக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்