மேலும் செய்திகள்
பலாத்கார வழக்கு: மாஜி எம்.எல்.ஏ., ஆயுள் தண்டனை நிறுத்தம்
59 minutes ago
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
1 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
1 hour(s) ago
ராம்நகர்: பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷை, எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ஆஞ்சநேயருடன் ஒப்பிட்டு உள்ளார்.ராம்நகர் மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா அளித்த பேட்டி: ஆதரவு இல்லை
தேவகவுடா, குமாரசாமிக்கு ஒரு காலத்தில் 60 சதவீத ஒக்கலிகர்கள் ஆதரவு தந்தனர். இதனால் தேவகவுடாவால் பிரதமர் ஆக முடிந்தது. குமாரசாமி இரண்டு முறை முதல்வர் ஆனார். பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், இப்போது அப்பா - மகனுக்கு ஒக்கலிகர்கள் ஆதரவு இல்லை.ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி பாலகங்காதரநாத சாமிக்கு, தேவகவுடாவும், குமாரசாமியும் எப்படி எல்லாம், தொல்லை கொடுத்தனர் என, எங்களுக்கு தெரியும். பாலகங்காதரநாத சாமியுடன், தேவகவுடாவுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. முதல்வர் பதவியில் இருந்து தன்னை இறக்கிவிட்டவர்களுடன் சென்று, நிர்மலானந்த சுவாமியை குமாரசாமி சந்தித்துள்ளார். அவருக்கு வெட்கமாக இல்லையா?குமாரசாமியை நம்பியவர்களுக்கு அநீதி தான் நடந்து உள்ளது. இதனால் தான் ம.ஜ.த.,வில் இருந்து வெளியேறினேன். அமைச்சர்கள் செலுவராயசாமி, ஜமீர் அகமதுகானும் ம.ஜ.த.,வில் இருந்து வெளியே வந்தனர். தற்போது காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக உள்ளனர். குமாரசாமி தான் கூட்டணி கட்சி முதல்வர் என்று அறிவிக்க, பா.ஜ., தலைவர்களுக்கு தைரியம் உள்ளதா? ம.ஜ.த., கட்சியை பிரதமர் மோடி காலடியில், அடகு வைத்துவிட்டனர். லோக்சபா தேர்தலில் 3 தொகுதிகளை, அழுது புரண்டு குமாரசாமி வாங்கி உள்ளார். இப்போதே இப்படி இருந்தால், சட்டசபை தேர்தலில் ம.ஜ.த., கட்சி நிலை என்னவாகும்? கட்டிப்போட முடியாது
பெங்களூரு ரூரலில் போட்டியிடும், காங்கிரஸ் எம்.பி., சுரேஷை தோற்கடிக்க, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் ஒன்றிணைந்து உள்ளனர். சுரேஷை தோற்கடித்து அவரை கட்டிப்போட்டு விடலாம் என்று நினைக்கின்றனர். அது கண்டிப்பாக நடக்காது. சுரேஷ், ஆஞ்சநேயரை போன்றவர். சீதாதேவியை மீட்க இலங்கை சென்ற, ஆஞ்சநேயரை கட்டிப் போட்டனர். தனது சக்தியால் அவர் மீண்டு வந்தார். சுரேஷை கட்டிப்போட நினைத்தாலும் அதே நிலை தான் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
59 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago