உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா பிரசாரத்தில் தி.மு.க.,வை வறுத்த மோடி

மஹாராஷ்டிரா பிரசாரத்தில் தி.மு.க.,வை வறுத்த மோடி

கோலாப்பூர்: மஹாராஷ்டிராவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தி.மு.க., மற்றும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் காங்கிரசுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.மஹாராஷ்டிராவில் உள்ள, 48 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. கோலாப்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:மஹராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, உண்மையில் போலி சிவசேனா. அதன் நிறுவனர் பாலாசாஹேப் பால் தாக்கரேயின் ஆன்மா எங்கிருந்தாலும், கட்சியின் தற்போதைய நிலைக்கு, அதன் கொள்கைகளுக்கு நிச்சயம் வருத்தப்படும்.இவர்கள் யாருடன் கூட்டணி வைத்துள்ளனர் என்பது தெரியுமா? சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவ்வாறு பேசியதற்காக அந்த கட்சி தலைவர்களை மும்பைக்கு வரவழைத்து, பாராட்டு விழா நடத்தினர்.நாட்டை வடக்கு மற்றும் தெற்காக பிரிக்க வேண்டும் என கேட்கும், காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்து உள்ளார்.கர்நாடகாவில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், முஸ்லிம்களையும் ரகசியமாக காங்கிரஸ் சேர்த்து உள்ளது. நாடு முழுதும் இதை செயல்படுத்த துடிக்கிறது. அந்த கட்சியுடன், உத்தவ் கூட்டணி வைத்துள்ளார். இவர்களுடைய இண்டியா கூட்டணி, இந்த தேர்தலில் மூன்று இலக்க தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து பிரதமர்கள் ஆட்சி செய்வது தொடர்பாக பேசி வருகின்றனர். இதை மஹாராஷ்டிரா மற்றும் நாட்டு மக்கள் ஏற்க மாட்டர்கள். அதனால், இவர்கள் மீதான தங்களுடைய கோபத்தை மக்கள், தேர்தலில் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Krishna Ramachandran
ஏப் 30, 2024 10:45

உதயநிதி சாதனத்தை பற்றி பேசிய சர்ச்சை பேச்சு இந்தியா கூட்டணிக்கு ஒரு தலைவலிதான் சாவர்க்கர் பற்றிய பேச்சு மட்டுமில்லாமல் திமுகவினர்ம் பல முறை விமர்சனம் செய்துள்ளனர்


Anantharaman Srinivasan
ஏப் 28, 2024 13:53

சரத்பவார் கட்சியை பிளந்து பிஜேபி கூட்டணியிலிருக்கும் அஜித்பவார், அடல்பிகாரி வாஜ்பாயை விட நல்லவர் மஹாராஷ்டிராவில் திமுக வை எத்தனை பேருக்குத்தெரியும்??


Rajathi Rajan
ஏப் 28, 2024 12:54

ஆடு நனையுதுனு ஓநாய் அழுத்த கதை தான் ஞாபகத்திற்கு வருது


venugopal s
ஏப் 28, 2024 11:14

மஹாராஷ்டிராவில் போய் திமுகவை வறுத்தெடுத்து யாருக்கு என்ன பிரயோஜனம்? எல்லாம் வெயில் கொடுமை!


Velan Iyengaar
ஏப் 28, 2024 10:34

அல்லு விடுது திமுக பெயரை கேட்டாலே பேதியாகுது எவ்வ்ளோ பயம்?? ஜூன் நாலு காத்திருக்கிறோம் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்ரே மேலே மக்கள் அனுதாபம் கொண்டுள்ளது தெள்ளத்தெளிவு மஹாராஷ்டிராவும் bj கட்சிக்கு ஊத்திக்கும் போலயே


Leelakrishnan
ஏப் 28, 2024 11:37

dmk வை ஆதரிக்கர, கடவுள் இல்லை என்பவன் உனக்கு ஓகே வா


J.V. Iyer
ஏப் 28, 2024 08:28

உலகத்தில் ஹிந்துக்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் அது ஹிந்துஸ்தான்-பாரதத்தைத்தவிர வேறு என்ன இருக்கமுடியும்?


Velan Iyengaar
ஏப் 28, 2024 11:32

வாய்ப்பே இல்ல ராஜா


Velan Iyengaar
ஏப் 28, 2024 11:33

ஹி ஹி ஹி நேபாள் இருக்கே உம்மை யாரும் அங்கு செல்வதில் இருந்து தடுக்க மாட்டார்கள்


இவன்
ஏப் 28, 2024 07:16

பின்ன நல்லது சொன்ன எவன் vote போடுவான் உபிஸ் ??


T.sthivinayagam
ஏப் 28, 2024 05:30

எதை சொல்லியாலது வெற்றி பெற்றால் சரி


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி