உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோகன்லால், மாதவன், மனு பாகர்...; பிரதமர் மோடி தேர்வு செய்த 10 பேர்!

மோகன்லால், மாதவன், மனு பாகர்...; பிரதமர் மோடி தேர்வு செய்த 10 பேர்!

புதுடில்லி: உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட 10 பேரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார். நேற்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் உடல் பருமன் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று எட்டில் ஒருவர், உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகிறார் என, ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் கவலையளிக்கும் விஷயம், குழந்தைகளிடம் இந்த பிரச்னை அதிகரித்துள்ளது தான். உடல் பருமன், பல வகையான நோய்களை, பிரச்னைகளை உருவாக்குகிறது. உங்களுடைய உணவில் பயன்படுத்தும் எண்ணெயில், 10 சதவீதத்தை குறையுங்கள். அதுபோல, உணவுக்கான எண்ணெய் வாங்கும்போதே, 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு படிப்படியாக இதை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எண்ணெயை குறைக்கும் அதே நேரத்தில், 10 பேரிடமும் இது போன்ற சவாலை முன்வையுங்கள். இதனால், உடல் பருமன் பிரச்னையில் இருந்து விடுபட முடியும், இவ்வாறு அவர் பேசினார். இந்த நிலையில், உடல் பருமனுக்கு எதிரான பிரசாரம் செய்யவும், எண்ணெய் கலந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிரதமர் மோடி, நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என 10 பேரின் பெயரை தேர்வு செய்துள்ளார். தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, போஜ்புரி நடிகர் நிராஹுவா ஹிந்துஸ்தானி, துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நடிகர் மோகன்லால், தொழிலதிபர் நந்தன் நிலேகனி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, நடிகர் மாதவன், பாடகி ஸ்ரேயா கோஷல், ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தி ஆகியோரின் பெயர்களை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார். இந்த விழிப்புணர்வு இயக்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, தான் தேர்வு செய்தவர்களும் தலா 10 பேருக்கு இந்த சவாலை விடுக்கும்படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

P. SRINIVASAN
பிப் 24, 2025 17:53

முதல்ல தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுங்கள்... அப்பறம் பாக்கலாம் உங்கள் பித்தலாட்டம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 21:43

மீனவர்கள் பேராசை காரணமாக எல்லை தாண்டி விசைப்படகுகளுடன் செல்வதே பிடிபடக்காரணம் ன்னு உங்க கருணாநிதி தெளிவா சொல்லியிருக்கார் ...... அதில்தான் தீர்வும் இருக்குது ....


Venkatesan Srinivasan
பிப் 24, 2025 16:19

"ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா" இந்த பத்தில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது நல்ல பாகுபாடற்ற சமத்துவ தேசிய கண்ணோட்டம்.


V.Mohan
பிப் 24, 2025 14:40

மாநில முதலமைச்சர், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, இந்திய அரசுக்கு வரி தரமாட்டோம்னு சொல்ல ஒரு நொடி போதும் என புத்திசாலித்தனமாக பேசும் போது அந்த முக்கிய செய்திக்கு தமிழக மக்கள், திராவிட விசுவாசிகள் யாரும் ஒரு கருத்து பதிவு போடுவதில்லை ஆனால் பிரதமர் மோடி அவர்கள் ஏதாவது முக்கியமான விஷயம் பற்றி பேசினால் போதும், இந்த விவரம் கெட்ட திராவிட விசுவாசிகள் அதை பிரித்து, திரித்து,நாசமாக்கி நாராசமாக்கி விடுகின்றனர். மோடி அவர்களது இருப்பும், நினைப்பும் திராவிட விசுவாசிகளுக்கு தவிர்க்கவே முடியாததாகி விட்டது. கனவில கூட பிதற்றுவார்கள் போல.,,ஹூம்


MANIMARAN R
பிப் 24, 2025 13:26

நாட்ல குண்டா இருக்கிறது ஒரு பிரச்சினையா . பிரதமருக்கு மான் கி பதில் பேச டாபிக் கிடைக்க வில்லை போலும்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 24, 2025 12:23

ஆங் .... அவங்க செல்வாக்கை யூஸ் பண்ணிக்குங்க ......


இறைவி
பிப் 24, 2025 12:06

மோகன்லாலின் மாமனார் பாலாஜி சுத்த தமிழ் ஐயங்கார். காலம் சென்ற ஒய். ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலக்ஷ்மி அம்மையாருக்கு உறவினர்.


சண்முகம்
பிப் 24, 2025 10:39

மோகன்லாலின் மாமனார் பாலாஜியும் மலையாளம் தான்.


சண்முகம்
பிப் 24, 2025 10:37

மோகன்லால் ஒரு மோட்டாலால். மம்மூட்டியே சிறந்த லால்.


ஆரூர் ரங்
பிப் 24, 2025 10:23

தமிழ்நாட்டு மருமகன் மோகன்லாலுக்கு இந்த கஷ்டம் வந்திருக்க வேண்டாம்.


Barakat Ali
பிப் 24, 2025 10:22

முதல்ல மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துங்க ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை