உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தாவின் பேச்சுக்கு எதிர்ப்பு மே.வங்கத்தில் துறவியர் பேரணி

மம்தாவின் பேச்சுக்கு எதிர்ப்பு மே.வங்கத்தில் துறவியர் பேரணி

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தை கண்டித்து, பல்வேறு ஹிந்து அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட துறவியர் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. நேற்று ஆறாம் கட்ட தேர்தல் நடந்தது.

குற்றச்சாட்டு

கடந்த 18ல் மேற்கு வங்கத்தின் கோஹத்தில் திரிணமுல் காங்கிரசின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவா ஆசிரமத்தில் உள்ள சில துறவியர், டில்லி பா.ஜ., தலைவர்களின் கட்டளைப்படி செயல்படுகின்றனர்.'அவர்கள் தங்களின் ஆன்மிக பணியை விடுத்து, இதுபோன்ற பணிகளை தான் மேற்கொள்கின்றனர்' என குற்றஞ் சாட்டினார்.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்து அமைப்பினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை மம்தா சுமத்துகிறார்' என்றார்.இந்நிலையில் பாரத் சேவா ஆசிரம நிர்வாகி சுவாமி பிரதீப்தானந்தா, மம்தாவுக்கு சமீபத்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதில் அவர், 'மம்தா, தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதற்கு பதிலளிக்கும் வகையில், மற்றொரு பிரசார கூட்டத்தில் பேசுகையில், 'ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவா ஆசிரமம் ஆகியவை சமுதாய நோக்குடன் பல்வேறு தொண்டுகளை மேற்கொண்டு வருகின்றன. 'அந்நிறுவனங்களுக்கு எதிராக நான் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், அதில் பணியாற்றும் சிலர் தான் அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக, பாரத் சேவா ஆசிரமத்தின் நிர்வாகி கார்த்திக் மஹாராஜ் என்கிற சுவாமி பிரதீப்தானந்தா என்பவர் பா.ஜ., வில் இணைந்தே பணியாற்றலாம்' என்றார்.

கண்டன குரல்

இதுபோன்ற தொடர்ந்து அவதுாறு கருத்துகளை தெரிவித்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டிக்கும் வகையில், நேற்று கோல்கட்டா மற்றும் சிலிகுரி ஆகிய இடங்களில், 100க்கும் மேற்பட்ட துறவியர் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த பேரணியில், மம்தா குற்றஞ்சாட்டிய கார்த்திக் மஹாராஜும் முன்னின்று பங்கேற்று தன் கண்டன குரலை எழுப்பினார்.அப்போது கார்த்திக் மஹாராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒட்டுமொத்த துறவியர் சமூகத்தையே முதல்வர் மம்தா பானர்ஜி இழிவுப்படுத்தி உள்ளார். இதை, துறவியர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Lion Drsekar
மே 26, 2024 18:00

எதுவுமே எடுபடாது எல்லாமே தலைக்கு மேலே சென்றுவிட்டது . ஒரு மாடலின் கீழ் செயல்படும் பூமியில் ஏதோ இவர்கள்தான் இறைவனை காப்பாற்ற பிறந்தவர்கள் என்று நினைத்து குறிப்பாக கனரா பாங்கில் பணியாற்றி ஓய்வு பெற்ற 40 நல்லுங்கள் கிராமப்புறங்களில் முட்புதரில் மறைந்து கிடைக்கும்


Balasubramanian
மே 26, 2024 14:40

இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு தீதி அரசியல் துறவரம் மேற்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை!


அரசு
மே 26, 2024 12:42

முற்றும் துறந்த துறவிகளுக்கு அரசியல் எதற்கு?


Svs Yaadum oore
மே 26, 2024 10:02

ஒரு காலத்தில் தங்க வங்கம் ....ஆனால் இப்போதைய நிலைமை என்ன?? ....ரபீந்திரநாத் தாகூர் தோற்றுவித்த விஸ்வபாரதி பல்கலை என்றோ தரமிழந்து போனது ....பகவான் அரவிந்தர் தோன்றிய மாநிலம் ....ஆனால் இங்கு படித்து வரும் மேற்கு வங்க பட்டதாரி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் கூட சரியாக தெரியாது .... எல்லாம் நீண்ட நெடிய கம்யூனிஸ்ட் ஆட்சி உபயம் ....


Svs Yaadum oore
மே 26, 2024 09:30

விடியல் திராவிடனுங்க ராமசாமிதான் பெண்களை படிக்கச் சொன்னான் என்று கூவுவானுங்க ...சென்னை மாம்பலத்தில் ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளி ஆரம்பித்த ஆண்டு 1930....சுதந்திரத்திற்கு முன் ஆரம்பம் .....ராமசாமி சொல்லித்தான் இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டதா ??..இன்றுவரை இந்த பள்ளிகள் செயல்படுது ..அப்படிப்பட்ட நீண்ட நெடிய வரலாறு கொண்ட ராமகிருஷ்ணா மிஷன் இப்போது நிலைமை என்ன ??...


Svs Yaadum oore
மே 26, 2024 09:22

இங்குள்ள மதத்தின் பெயரால் கட்சிகளுடன் விடியல் திராவிடனுங்க மத சார்பின்மையாக கூட்டணி வைப்பானுங்க ....ஆனால் ஹிந்து மதத்துக்கு ஆதரவாக எவனாவது பேசிவிட்டால் உடனே அவன் மத வெறியன் ...மேற்கு வங்கத்தில் ராமகிருஷ்ணா மிஷன் செயலிழந்து வலுவிழந்து பல காலமானது ....எங்கெல்லாம் கம்யூனிஸ்ட் ஆட்சியோ அங்கெல்லாம் கலாச்சாரம் பண்பாடு என்று மொத்தமும் அழியும் ...முன்னேறிய மாநிலமான கேரளாவும் இதற்கு உதாரணம் ...


Mahendran Puru
மே 28, 2024 12:23

பாவம் ராம்கிருஷ்ண மடம். பெரிய சங்கி இன்றைய கடவுள் பேச்சைக் கேட்டு ஊர்வலம் போகிற நிலைமை.


Rajah
மே 26, 2024 08:55

பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை முடிந்ததும் என்ன நடக்கின்றது என்று சென்று பார்க்கவும் அதே போல் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சென்று பார்க்கவும். யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பது அந்த இடங்களில்தான் தீர்மானிக்கப்படுகிறது.


Kasimani Baskaran
மே 26, 2024 08:04

இந்துக்களை ஒருங்கிணைக்கும் மம்தாவுக்கு பாராட்டுகள்...


vadivelu
மே 26, 2024 06:19

கிருத்துவ பாதிரியார்கள் பா ஜா க விற்க்கு வாக்களிக்காதீர்கள் என்று திரு சபைக்கு வருவோரிடம் உரையாற்றலாம், இமாம்கள் அதே போல மசூதியில் முஸ்லீம்களுக்கு சொல்லலாம் ஆனால் யாரும் பா ஜா காவிற்கு வாக்களியுங்கள் என்று சொல்ல கூடாது என்பது இந்த எத்ரி கட்சிகளின் கொள்கை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை