உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் பட்டம் பெற்ற தாய் - மகன்

ஒரே நாளில் பட்டம் பெற்ற தாய் - மகன்

பெங்களூரு: பெங்களூரின், சர்வதேச தக: ல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், நேற்று முன்தினம் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் ரஞ்சனி நிரஞ்சன், 48, பி.ஹெச்.டி., பட்டமும், அவரது மகன் ராகவா, 22, எஸ்.என்.எம்., டெக் பட்டமும் பெற்றனர்.ரஞ்சனி: என் மகனுடன், நானும் பட்டம் பெற்றதற்கு, மகிழ்ச்சி. இது எங்கள் குடும்பத்தின் சாதனை. அனைவருக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. என்னை விட, 13 வயது சிறிய மாணவர்களுடன் வகுப்பில் அமர்ந்திருந்தது, ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. நாளடைவில் சரியானது.ராகவா: என் தாயார் பாடத்தில் சந்தேகங்களை, என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார். குறிப்பாக கணிதம் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு விளக்கம் கேட்பார். தாயுடன் பட்டம் பெற்றது, எனக்கு பெருமையான விஷயம். இச்சாதனைக்கு, என் தந்தையின் ஊக்கமே காரணம். எங்களுக்கு முதுகெலும்பாக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 22:36

பி ஹெச்டிக்காக ஆய்வு செய்தவர் எம் டெக் மாணவரிடம் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றாரா ????


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி