உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வேட்பாளராகிறார் மும்பை தாக்குதல் அரசு வழக்கறிஞர்

பா.ஜ.,வேட்பாளராகிறார் மும்பை தாக்குதல் அரசு வழக்கறிஞர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வல்நிகாம் பா,ஜ, வேட்பாளராக களம் காண்கிறார்கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அன்று மும்பையில் தாஜ் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் ஏராளமானோர் பலியாகினார். இது குறித்த வழக்கில் அரசு தரப்பில் உஜ்வல் நிகாம் என்பவர் வாதாடி வந்தார்.இந்நிலையில் உஜ்வல் நிகாம் மும்பை வடக்கு மத்திய தொகுதி பா.ஜ.,வேட்பாளராக நிறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொகுதியின் தற்போதைய எம்.பி.,யாக இருந்து வருபவர் பூனம் மகாஜன். இவரது தந்தை பிரமோத் மகாஜன். இவர் கடந்த 2006-ல் தகராறு ஒன்றில் சகோதரர் பிரவீன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கிலும் உஜ்வல்நிகாம் வக்கீலாக இருந்துள்ளார், பூனம் மகாஜன் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மும்பை வடக்கு மத்திய தொகுதியின் எம்.பி.,யாக இருந்துள்ளார். மேலும் பா.ஜ.,வின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவராக இருந்துள்ளார்.தற்போது பூனம் மகாஜனுக்கு பதிலாக உஜ்வல் நிகாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி