உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை கொலையாளி டில்லியில் சிக்கினார்

மும்பை கொலையாளி டில்லியில் சிக்கினார்

புதுடில்லி:மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர், மத்திய டில்லியின் கம்லா மார்க்கெட்டில் பிடிபட்டார்.மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிபுல் சிகாரி,38, மும்பையில் நடந்த கொலை வழக்கில் மஹாராஷ்டிர போலீசால் தேடப்பட்டு வந்தார். அவர், டில்லி கம்லா மார்க்கெட் ஜி.பி. ரோடுக்கு நேற்று முன் தினம் வருவார் என, 21ம் தேதியே டில்லி போலீசுக்கு தகவல் கிடைத்தது.இரவு 9.15 மணிக்கு கம்லா மார்க்கெட் சிக்னல் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு வந்த பிபுல் சிகாரியை சுற்றிவளைத்துக் கைது செய்தனர். மும்பையிலிருந்து தப்பிய டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் திரிவதை அவரது மொபைல் போன் சிக்னலை வைத்து போலீசார் கண்காணித்துவ் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி