தேசியம்
பிளவை ஏற்படுத்த கூடாது!அமைச்சரவையில் உள்ள சிலர், மஹாராஷ்டிராவின் கலாசார பாரம்பரியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இதுபோன்ற தவறான அறிக்கைகளின் பின்னால் உள்ள நோக்கம் புரியவில்லை. கடந்த காலங்களில், மஹாராஷ்டிர தலைவர்கள் மத நல்லிணக்கத்தைப் பேண பாடுபட்டனர்.அஜித் பவார்மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,முறைப்படுத்தியவர் பிரதமர்!முந்தைய காங்கிரஸ் அரசு, 2013ல் தேர்தலையொட்டி உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. அப்போது இந்த சட்டத்தின் கீழ் விதிகள் கூட உருவாக்கப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014ல் பொறுப்பேற்ற பின், 80 கோடி மக்களுக்கு முறையாக இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.பிரஹலாத் ஜோஷிமத்திய அமைச்சர், பா.ஜ.,மீண்டும் எங்கள் ஆட்சி!தெலுங்கு தேசம் தலைமையிலான அரசு அமைந்து 10 மாதங்களுக்கு மேல் ஆகியும், தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகிறது. ஆந்திராவில் மீண்டும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். எங்கள் கட்சி குரலற்றவர்களின் குரலாக இருக்கும்.ஜெகன்மோகன் ரெட்டிதலைவர், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்