உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

ஏழைகளிடம் துடைத்தெடுக்கின்றனர்!பொது மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்கவில்லை எனக் கூறி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 8,500 கோடி ரூபாயை பொதுத் துறை வங்கிகள் பிடித்தம் செய்துள்ளன. தொழில்துறையினரின் கடனை தள்ளுபடி செய்துள்ள பா.ஜ., அரசு, ஏழைகளின் பாக்கெட்டை காலியாக்குகிறது. பிரியங்காபொதுச்செயலர், காங்கிரஸ்அழைப்பு கட்டணம் மிகக்குறைவு!நாட்டில், 117 கோடி மொபைல் இணைப்புகளும், 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன. ஒரு நிமிடத்திற்கான அழைப்புக் கட்டணம் தற்போது, 3 பைசா என்ற அளவிலும், 1 'ஜிபி' டேட்டா கட்டணம் 9 ரூபாய் என்ற அளவிலும் உள்ளது. இது உலகிலேயே மிகக் குறைந்த கட்டணங்களில் ஒன்று. ஜோதிராதித்ய சிந்தியாமத்திய அமைச்சர், பா.ஜ.,ராணுவத்துக்கு உத்வேகம்!அக்னிவீர் திட்டம் நம் ராணுவத்தை போருக்கு எப்போதும் தயார் நிலையிலும், இளமையுடனும் வைத்திருக்கும். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் கொண்டு வரப்பட்ட திட்டம். இது ராணுவத்தை சிதைக்கும் என்று கவலைப்பட தேவையில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் கூடாது.நிர்மலா சீதாராமன்மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை