| ADDED : ஆக 21, 2024 12:12 AM
இது தான் பா.ஜ., விருப்பம்!ஏழைகள், தலித் மற்றும் சமூக நீதிக்காக எப்போதும் ஆதரவாக இருப்பதால், பா.ஜ., என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. சமூக, பொருளாதார ரீதியாக, ஏழைகள் முன்னேறக் கூடாது என்பதே பா.ஜ.,வின் விருப்பம். சித்தராமையாகர்நாடக முதல்வர், காங்.,உண்மையை மறைக்க முயற்சி!கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், உண்மையை மறைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் திரிணமுல் காங்., அரசு முயற்சிக்கிறது. பலாத்காரம் செய்தவரை காப்பாற்ற மம்தா அரசு முயற்சிக்கிறது.ஷாஜாத் பூனாவல்லாபா.ஜ., செய்தித் தொடர்பாளர்பழிவாங்கும் அரசியல் இல்லை!ஒரு காலத்தில் பிளவுபடாத சிவசேனாவும், காங்கிரசும் எதிரெதிர் திசையில் கசப்பான மனநிலையுடன் இருந்தன. அந்த சமயத்தில், ராஜிவ் தலைமையிலான காங்., அரசை, பால் தாக்கரே கடுமையாக விமர்சித்தார். ஆனால், அவர் ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடவில்லை.உத்தவ் தாக்கரேதலைவர், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா