| ADDED : ஆக 22, 2024 12:56 AM
சவால்களுக்கு தயார்!நான்காவது தொழில் புரட்சியால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் இந்தியா தயாராக உள்ளது. இன்று, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் உருவாகியுள்ளன. திரவுபதி முர்முஜனாதிபதிபாதுகாப்பு வேண்டாம்!கடந்த சில மாதங்களாக மஹாராஷ்டிராவில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது. அனைத்து வயது பெண்களும் அச்ச உணர்வோடு உள்ளனர். எனவே, எனக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை நீக்கிவிட்டு, மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணிக்கு அவர்களை அனுப்புங்கள்.சுப்ரியா சுலேலோக்சபா எம்.பி., தேசியவாத காங்., சரத் சந்திர பவார் அணிபோராட்டத்தில் குதிப்போம்!மலையாள திரைப்படத் துறை குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின்படி ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை இல்லை என்றால் போராட்டத்தில் இறங்குவோம்.சதீஷன்கேரள எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்