உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

இட ஒதுக்கீடுக்கு எதிரானவர்கள்!காங்கிரஸ், சமாஜ்வாதி என்ன தான் எஸ்.சி., - எஸ்.டி., இடஒதுக்கீடு குறித்து பேசினாலும், எஸ்.சி., - எஸ்.டி., இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மவுனம் சாதிக்கின்றனர். இதிலிருந்தே அவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவாகிறது.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்தனித்து போட்டி!ஹரியானாவில் காங்கிரஸ் அதிக பலத்துடன் உள்ளது. அதனால் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. தனித்தே போட்டியிடுவோம். ஹரியானா மக்கள் பா.ஜ., அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அவர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அது காங்கிரசுக்கு சாதகமாக அமையும்.குமாரி செல்ஜா மூத்த தலைவர், காங்கிரஸ்போராடும் ஹிந்துக்கள்!வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டு அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையிலும், ஒரு ஹிந்து கூட இந்திய எல்லைக்குள் நுழையவில்லை. அதே சமயம் கடந்த ஒரு மாதத்தில் 35 வங்கதேச முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுஉள்ளனர். இவர்கள் ஜவுளி துறையில் வேலை செய்ய அசாம் வழியாக பெங்களூரு, கோவைக்கு செல்ல இருந்தவர்கள். ஹிமந்த பிஸ்வ சர்மாஅசாம் முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை