உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராம பக்தர்களை தடுத்து நிறுத்திய நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்: அமித்ஷா தாக்கு

ராம பக்தர்களை தடுத்து நிறுத்திய நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்: அமித்ஷா தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: 'ராம மஹோத்சவம்' கொண்டாடியபோது, ராம பக்தர்களை நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன் தடுத்து நிறுத்தினர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது; ஒடிசாவில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 17ல் பா.ஜ., வெற்றிபெறும். சட்டசபை தேர்தலில் 147 தொகுதிகளில் 75 இடங்களில்பா.ஜ., வெற்றி பெறும். ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருக்க மாட்டார். அவர் முன்னாள் முதல்வராகி விடுவார்.

இளைஞர்கள்

அரசு அதிகாரி வைத்து ஆட்சி நடத்துபவர்களை பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து தோல்வி அடைய செய்ய வேண்டும். ஒடிசாவில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தவுடன், இளைஞர்கள் வேறு எங்கும் வேலை தேடாமல் இருக்க தொழிற்சாலைகளை உருவாக்குவோம். ஒடிசா மக்களுக்கு பிரதமர் மோடி இலவசமாக 5 கிலோ அரிசி வழங்கினார். ஆனால் பட்நாயக் தனது புகைப்படங்களுடன் சணல் பைகளில் அரிசியை விநியோகித்தார்.

ராம பக்தர்கள்

ஒட்டுமொத்த தேசமும் 'ராம மஹோத்சவம்' கொண்டாடியபோது, நவீன் பட்நாயக் மற்றும் அவரது அரசியல் வாரிசாக அறியப்படும் தமிழகத்தை சேர்ந்தவரும் (வி.கே.பாண்டியன்) ஒடிசா மக்களை கொண்டாடவிடாமல் தடுத்தனர். ராம பக்தர்களை தடுத்து நிறுத்தியவர்கள் ஆட்சியில் தொடரலாமா? தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசா முதல்வராக வரலாமா? நரேந்திர மோடி, ஒடியா மொழி பேசும் ஒரு இளம் முதல்வரை உங்களுக்கு வழங்க இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Senthilraj
மே 29, 2024 16:52

இதே கருத்தை வேறு யாராவது சொல்லியிருந்தா இந்நேரம் மக்களை துண்டாட நினைக்கிறார்கள், பிரிவினைவாதம் என சொல்லிருப்ப... நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு ஒடியா மக்கள், தமிழ் மக்களென்று பிரிவினை பேசிக்கிட்டு இருக்கிங்க...


venugopal s
மே 29, 2024 11:51

இந்தத் தேர்தலில் வட இந்திய மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர் என்று தோன்றுகிறது! பாஜகவுக்கு வட இந்தியாவில் ஆப்பு வைக்கப் போகின்றனர்!


Deva
மே 28, 2024 21:46

Hate speech should be avoided


sankaranarayanan
மே 28, 2024 21:38

ஏன் தமிழகத்தில் ஒரு வகுப்பினரை நாட்டின் சுதந்திரத்திற்கு தியாகம் செய்த மகான்களை கல்வியில் சிறந்த மேதைகளை உயர்ந்த ஜாதி என்றே பலமுறை குறிப்பிட்டு பின் தள்ளி அவர்களை முன்னேறவிடாமல் அரசியல் விளையாட்டுகள் செய்தும் பிழைக்கின்ற அரசியலையும் தலைவர்களையும் ஏன் யாருமே கண்டுகொள்வதில்லை எப்போது எல்லாரும் சமம் என்ற நடவடிக்கை வரும் அப்போதுதான் நாடு முன்னேறும் மக்கள் முன்னேறுவார்கள்


Ahamed naazar
மே 28, 2024 20:51

ஏன் முஸ்லீம்கள் மீது இப்படி வெறுப்பு கொட்டுகிறீர்கள். அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள். ஒன்று சொல்லுங்கள்.


தமிழ்வேள்
மே 29, 2024 10:53

வரலாற்றை திருப்பி பாருங்கள் ...செய்த அட்டூழியங்கள் கணக்கிலடங்காது ...அப்புறம் வெறுக்காமல் வெண்சாமரமா வீசுவார்கள் ? அமைதியான மக்களை ஆடுமாடுகளை விட கேவலமாக நடத்தி , அடிமையாக்கி , பெண்களை வன்புணர்ந்து ,கோவில் இடித்து , கொள்ளியடித்து -என சொல்லிலடங்கா கொடுமைகளை உங்கள் முன்னோர் செய்ததை வசதியாக மறந்துவிட்டீர்களா ? நல்ல நடிப்பு ..பேஷ் ..பேஷ் ..


சதிஷ்
மே 28, 2024 19:10

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசா முதல்வராக வரலாமா அமித்ஷா அவர்களின் இந்த வார்த்தைகள் வருத்தம் தருகிறது. ஏன் இது இந்தியா இல்லையா அவர் இந்தியர் இல்லையா? தகுதி உள்ள யாராக இருப்பினும் அவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்குதானே உள்ளது.


Anantharaman Srinivasan
மே 28, 2024 18:42

நேர்மையான ஓட்டு எண்ணிக்கை நடந்தால் ஒடிசாவை நவீன் பட்நாயக்கிடமிருந்து பிஜேபி வளைக்க முடியாது.


N MARIAPPAN
மே 28, 2024 18:29

10 வருடம் என்ன பண்ணீங்க அதை சொல்லி வோட்டு கேளுங்க பார்ப்போம்


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
மே 28, 2024 18:17

கீழ் தர அரசியல்


Selvakumar Krishna
மே 28, 2024 18:13

நாட்டுக்கு என்ன கிழித்தார்கள் இந்த பத்து ஆண்டுகளில்? எப்போதும் பிரிவினை பற்றியே பேசுவது என்ன பொழப்பா?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ