உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல்: 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்

சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல்: 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் மறைத்து வைத்திருந்த ஐ.இ.டி.,வகை வெடிகுண்டு வெடித்து 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வனப்பகுதியில், நக்சலைட்கள் மறைத்து வைத்திருந்த ஐ.இ.டி.,வகை வெடிகுண்டு வெடித்தது.இதில் பாரத் லால் சாஹு, சதர் சிங் ஆகிய இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புருஷோத்தம் நாக், கோமல் யாதவ், சியாராம் மற்றும் சஞ்சய் குமார் ஆகிய 4 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வீரர்களின் தியாகம் வீண் போகாது

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக நமது அரசு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நக்சலைட்டுகள் திசைதிருப்ப, கோழைத்தனமான செயல்களை செய்து வருகின்றனர். வீரர்களின் தியாகம் வீண் போகாது. நக்சலைட்டுகளை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு விஷ்ணு தியோ சாய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
ஜூலை 18, 2024 11:52

நாட்டு மக்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். பத்து ஆண்டு காலம் வலுவான பெருமான்பையாக மக்கள் ஆதரவு கொண்ட ஆட்சி இருந்தது எந்த வித வெளி தாக்குதல் இல்லை . இப்போது அதே கட்சி ஆட்சி செய்தாலும் மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. இடை தேர்தல்களிலும் தோல்வி. மக்கள் விழிப்பு உண்ர்வீல் மாற்றம் தேவை.


மேலும் செய்திகள்