உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் வினாத்தாள் கசிவு எப்படி?: சி.பி.ஐ., புதிய தகவல்

நீட் வினாத்தாள் கசிவு எப்படி?: சி.பி.ஐ., புதிய தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'நீட்' நுழைவுத் தேர்வின்போது, வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட கும்பல் எப்படி செயல்பட்டது என்பது குறித்த புதிய தகவல்களை, சி.பி.ஐ., வெளியிட்டுள்ளது.இந்தாண்டு நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வின்போது, வினாத்தாள் கசிவு உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இந்த மோசடி நடந்துள்ளது உறுதியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=epem7b4m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இது குறித்து சி.பி.ஐ., நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது:

தேர்வு நடந்த ஒயாசிஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஷானுல் ஹக், அந்த நகரின் தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். இவரையும், பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் இம்தியாஸ் ஆலமையும், இந்த மோசடியின் முக்கிய நபரான பங்கஜ் குமார் தொடர்பு கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் இணைந்து, தேர்வு நடந்த மே, 5ம் தேதி காலையில் பாதுகாப்பு பெட்டியில் இருந்து வினாத்தாளை எடுத்து படம்பிடித்துள்ளனர். இதற்கிடையே, பீஹாரின் சில பிரபலமான மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரை, ஹசாரிபாகில் ஒரு இடத்தில் தங்க வைத்திருந்தனர். வினாத்தாள்களுக்கு அந்த மாணவர்கள் விடைகள் அளித்துள்ளனர்.தன் ஆட்கள் வாயிலாக, பணம் கொடுத்த, நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவை பகிரப்பட்டுள்ளன. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள பங்கஜ் குமார், தேர்வு நடந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மற்றும் வினாக்களுக்கு விடை எழுதித் தந்த மாணவர்கள், அவற்றை விலைக்கு வாங்கிய மாணவர்கள் என, 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sridhar
ஜூலை 26, 2024 13:06

ஒ, என்னடா ஒரு பயலும் இப்போ நிட்டை பத்தி பேசமாட்டேங்கறாங்களேன்னு பாத்தா, இப்போதான் காரணம் புரியுது சரி சரி.


rasaa
ஜூலை 26, 2024 11:55

எந்த ஒரு குற்றத்தின் பிண்ணனியில் இருப்பது...


பச்சையப்பன் கேபால் புரம்
ஜூலை 26, 2024 11:47

பாத்தீங்களா வடக்கன் வேலையை! இதற்காகத்தானே எங்கள் தளபதி நீட்டு வேண்டாம் வேண்டாம் என குதிக்கிறார். கேட்டாத்தானே!!!


karupanasamy
ஜூலை 26, 2024 11:24

இது வீராச்சாமி டெக்கினிக்கு மாதிரியே இருக்குதே. கொடுக்கு வேலையா இருக்கும்.


Ramalingam Shanmugam
ஜூலை 26, 2024 10:54

பப்பு உன் சொந்தக்காரன் தான் இப்போ என்ன சொல்ல போற


Mohan
ஜூலை 26, 2024 10:41

ஓ அமைதி மார்கத்தினரின் செயலா இது நாட்டுல குழப்பம் விலயவிக்குற செயல் ..நல்ல விசாரிக்கணும் ..பப்பு டீம் , இந்த தேர்வை எதிர்க்கிற டீம் கூட இதை செஞ்சிருக்கலாம் ...


rsudarsan lic
ஜூலை 26, 2024 10:35

National religious integration


Ganesun Iyer
ஜூலை 26, 2024 09:47

பங்கஜ் குமார்... குமார்ன்னு நிறைய பேர மாத்திக்காம இருக்காங்க....


Swaminathan L
ஜூலை 26, 2024 09:35

விடைகளைத் தந்த மருத்துவ மாணவர்கள் கல்லூரியிலிருந்தும், படிப்பிலிருந்தும் நீக்கப்பட்டு அவர்கள் மறுபடியும் மருத்துவப் படிப்பில் சேர்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும். வினாத்தாள், விடைகளை பணம் அள்ளிக் கொடுத்து வாங்கி தேர்வெழுதியவர்கள் எக்காலத்திலும் மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் தடை செய்யப்பட்ட வேண்டும். மோசடியில் ஈடுபட்ட மற்ற அனைவரும் வெளியே வர முடியாதபடி பல வருடங்கள் உள்ளே தள்ள வேண்டும். தில்லுமுல்லு செய்து தேர்வு எழுதியவர்களுக்குப் பண உதவி செய்த அவர்களின் பெற்றோர்களுக்குக் கூடுதலாக சில கோடி ரூபாய்கள் அபராதம் செலுத்த வைக்க வேண்டும். அத்தனை முகங்களையும் பத்திரிகைகள் மற்றும் நீட் தேர்வு என்டிஏ வலைத்தளத்தில் பதிவேற்றி அவர்கள் தில்லுமுல்லு மோசடி தகவல்களையும் வெளியிட வேண்டும்.


VENKATASUBRAMANIAN
ஜூலை 26, 2024 08:18

உடனே தண்டனை வழங்க வேண்டும். சும்மா இழுத்துக்கொண்டு போகக்கூடாது. அப்போதுதான் அடுத்தவருக்கு பயம் வரும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ