17 வயது சிறுமிக்கு வன்கொடுமை பக்கத்து வீட்டுக்காரர் கைது
கரவால் நகர்: வடகிழக்கு டில்லியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.கரவால் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணி அளவில் ஏதோ வேலை சொல்லி, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தன்னுடன் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.சம்பவம் பற்றி அறிந்ததும், சிறுமியின் பெற்றோர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை ஜி.டி.பி., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சிறுமிக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கரவால் நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.