உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலுார், நெய்வேலிக்கு புது ஏர்போர்ட்

வேலுார், நெய்வேலிக்கு புது ஏர்போர்ட்

புதுடில்லி : உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழகத்தின் வேலுார், நெய்வேலி உட்பட எட்டு மாநிலங்களில், 12 புதிய விமான நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது.சாமானிய மக்கள் விமான போக்குவரத்து சேவையை பயன்படுத்தவும், உள்நாட்டு விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், 'உதான்' திட்டம் 2016ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சிறு நகரங்களில் ஏர்போர்ட் அமைத்தல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஏர்போர்ட்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, உதான் திட்டத்தின் கீழ் 13 ஹெலிபோர்ட், இரண்டு நீர்வழி ஏரோடிரோம்கள் உட்பட, 85 விமான நிலையங்கள், 579 வழித்தடத்தை இணைக்கின்றன. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் நேற்று (ஜூலை 29) ராஜ்யசபாவில் கூறியதாவது:உதான் திட்டத்தின் கீழ், 12 விமான நிலையங்கள் இந்த ஆண்டு திறக்கப்பட உள்ளன. அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் கார் நிக்கோபாரில் உள்ள ஷிப்புர், சத்தீஸ்கரின் அம்பிகாபுர், மத்திய பிரதேசத்தின் ரேவா மற்றும் டாடியா, மஹாராஷ்டிராவின் அமராவதி, சோலாபூர், டாமன் - டையூவின் டாமன், ஹரியானாவின் அம்பாலா, உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மற்றும் சஹாரன்புர், தமிழகத்தின் வேலுார் மற்றும் நெய்வேலி உள்ளிட்ட 12 இடங்களில் இந்த விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.நாடு முழுதும் உள்ள செயல்படாத மற்றும் குறைந்த சேவை அளிக்கும் விமான நிலையங்களுக்கு புத்துயிர் அளித்து மேம்படுத்த, முதல்கட்டமாக 4,500 கோடியும், இரண்டாம் கட்டமாக 1,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Muruganandham S (Arul Nirmugan)
ஆக 03, 2024 00:40

தமிழ்நாட்டுக்கு நெய்வெலில இருந்து கரெண்ட் போகலாம், ஆனா தமிழ்நாட்டிலுள்ள ஒரு லிக்நைட் சிட்டிக்கு ஏர்போர்ட் வர கூடாது ல அதனா.....முதல உங்க ஊருக்கு என்ன வேணும் நூ கேட்டு பழகுங்க... அப்ரம் அடுத்த ஊருக்கு என்ன வேணாம் நு சொல்லுங்க நண்பர்களே........


Cherrie Chandran
ஜூலை 31, 2024 12:04

நெய்வேலி ஏர்போர்ட் உள்ளது, ஆனால் பயன்பாட்டில் இல்லை


Indhuindian
ஜூலை 30, 2024 17:52

Airport at vellore What a ridiculous proposal. The nearest airport is Chennai. To take a flight to Vellore - Reach the Chennai Airport with a travel time of about twenty minutes and report at least one hour before the flight take off, the flight time to Vellore -30 minutes and time taken to reach Vellore from the Airport - say twenty minutes. In total the minum time spent on taking a flight from Chennai to Vellore is not less than two and half hours. The travel by road even under the current road conditions NHAI is about two hours. Whom does this airport benefit. Same is the case with Neyveli Airport. Look at the Pondichery airport and its traffic.


Adhi Rangan
ஜூலை 30, 2024 14:51

நெய்வேலி இந்தியாவுக்கே கரண்ட் சப்ளை seyyuthu


Samy Chinnathambi
ஜூலை 30, 2024 13:15

அது என்ன நெய்வேலியில் ஏர்போர்ட் .அதுக்கு பக்கத்துல என்ன சிட்டி இருக்கு? ஏன் நாகபட்டினத்தில ஏர்போர்ட் கட்ட கூடாது? சுத்து வட்டாரம் பூரா பயன்படுத்தலாம்....... அங்கு தரிசு நிலம் தேவையான அளவு கள்ளிமேட்டில் இருக்கிறது..... வேளாங்கண்ணியில் கூட இருக்கிறது.


தத்வமசி
ஜூலை 30, 2024 12:55

ஓசூர் லிஸ்டுல இல்லையா ?


subramanian
ஜூலை 30, 2024 13:46

இந்த செய்தி மத்திய அரசு செய்யும் விமான நிலையம். ஓசூர் மாடல் பொய் திட்டம் - திமுக வினர் ஊரை ஏமாற்றி அபகரித்து வைத்துள்ள நிலத்தை காசாக்கும் திட்டம்.


S. Narayanan
ஜூலை 30, 2024 12:31

விவசாய நிலத்தை அழித்து g square வீடு கட்டும் போது மட்டும் வாய் மூடி கொள்வதன் மர்மம் என்ன


K.Muthuraj
ஜூலை 30, 2024 12:15

இதனால் விவசாயம் பாழாகாதா ?


ديفيد رافائيل
ஜூலை 30, 2024 11:26

எத்தனை பேரோட வாழ்வாதாரத்தை நாசம் பண்ண போறானுங்கன்னு தெரியல.


AKM KV SENTHIL MUSCAT
ஜூலை 30, 2024 11:18

திருச்சி டு மஸ்கட் வாரம் ஒருமுறை மட்டுமே விமான போக்குவரத்து சேவை உள்ளது டிக்கெட் விலையும் கூடுதலாக உள்ளது டிக்கெட் விலையும் குறைத்து வாரம் இரண்டு அல்லது மூன்று முறை விமான போக்குவரத்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் தினமலர் மூலமாக அரசுக்கு தெரிய படுத்துகிறோம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை