உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 142 இந்திரா உணவகங்களுக்கு உணவு சப்ளைக்கு புது ஒப்பந்தம்

142 இந்திரா உணவகங்களுக்கு உணவு சப்ளைக்கு புது ஒப்பந்தம்

பெங்களூரு : பெங்களூரில் 142 இந்திரா உணவகங்களுக்கு உணவு வழங்குவதற்காக, மாநகராட்சி, புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.கர்நாடகாவில் 2013- - 2018 காங்கிரஸ் ஆட்சியின் போது ஏழை மக்கள், குறைந்த விலையில் தரமான உணவு சாப்பிடும் வகையில், மாநிலம் முழுதும் இந்திரா உணவகங்கள் துவங்கப்பட்டன. பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திரா உணவகங்களுக்கு, உணவு வழங்கும் டெண்டரை, 'செப்டாக்' என்ற நிறுவனம் எடுத்திருந்தது.பா.ஜ., ஆட்சியின் போது இந்திரா உணவகங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில், கடந்தாண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், சில இடங்களில் இந்திரா உணவகங்களுக்கு, நிதி ஒதுக்கவில்லை என்பதும், உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதும் தெரிந்தது.இந்நிலையில் அரசு பணம் கொடுக்காததால் செப்டாக் நிறுவனம் உணவு வினியோகம் செய்வதை நிறுத்தியது. இதனால் மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் 11 இந்திரா உணவகங்கள் மூடப்பட்டன. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசுக்கு சங்கடத்தை உருவாக்கியது.இதையடுத்து, செப்டாக் நிறுவனத்தின் டெண்டரை மாநகராட்சி ரத்து செய்தது. பெங்களூரில் 142 இந்திரா உணவகங்களுக்கு உணவு வினியோகம் செய்யும் பொறுப்பு, 'ரிவார்ட்ஸ்' என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ரிவார்ட்ஸ் நிறுவனம் உணவு வினியோகம் செய்ய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ