உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி நியமனம்

உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி நியமனம்

புதுடில்லி :உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி ஜாய்மால்யா பாக்சியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும்படி ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.இதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மால்யா பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 ஜூன் 27ல், கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜாய்மால்யா நியமிக்கப்பட்டார். அதன்பின், 2021ல் ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34ல் 33 ஆக அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Perumal Pillai
மார் 11, 2025 11:55

இது எல்லாம் ஒரு நியூஸ் ?


Laddoo
மார் 11, 2025 11:01

இன்னொரு கொலிஜிய அட்டுழியம். தங்களுக்கு வேண்டியவர்களை தாங்களே நியமித்துக்கொள்வது. ஒரு தேர்வுமுறையும் இல்லாது நடக்கும் கூத்து. வீணாய் போன சந்துரு, கர்ணன் போன்றோர் இப்படி வந்தவர்கள்தான். கிரண் ரிஜ்ஜுவை மீண்டும் சட்டத்துறை அமைச்சராகுங்கள். இவர்தான் இந்த முறையை ஒழிக்க முடியும்.


Appa V
மார் 11, 2025 02:55

ரெண்டு மாசத்தில் கோடை விடுமுறை வந்து விடும்


புதிய வீடியோ