உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சராவார்:  குமாரசாமி குறித்து நிகில்

மத்திய அமைச்சராவார்:  குமாரசாமி குறித்து நிகில்

மாண்டியா : குமாரசாமி மத்திய அமைச்சர் ஆவார் என்று நம்பிக்கை இருப்பதாக, மகன் நிகில் கூறினார்.முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனும், ம.ஜ.த., இளைஞர் அணி தலைவருமான நிகில், மாண்டியாவில் நேற்று அளித்த பேட்டி:மாண்டியா லோக்சபா தொகுதியில் குமாரசாமி, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதில் சந்தேகமே இல்லை. அவர் மத்திய அமைச்சர் ஆவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆவார்.நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி விஷயத்தில் அவர் செய்துள்ள பணிகள் அபாரம். மாநிலத்தின் 28 லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வெற்றி பெறும்.தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்த, அனைவருக்கும் நன்றி. உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று, பிரஜ்வல் வழக்கில் குமாரசாமி கூறினார். அந்த நிலைப்பாட்டில் இப்போது வரை, உறுதியாக இருக்கிறார். பிரஜ்வலின் ஆபாச வீடியோ வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு, மாநில அரசு ஒப்படைக்க வேண்டும்.வீடியோவில் இருக்கும் பெண்கள், தற்கொலை செய்து கொண்டால், யார் பொறுப்பு. வீடியோவை வெளியிட்டவர்களையும் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை