உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை யாரும் கடத்தவில்லை: பெண்ணின் வீடியோ வெளியீடு

என்னை யாரும் கடத்தவில்லை: பெண்ணின் வீடியோ வெளியீடு

பெங்களூரு: ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா கடத்தியதாக சொல்லப்பட்ட பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என்று பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. வேலைக்கார பெண்ணை கடத்தியதாக, அந்த பெண்ணின் மகன், மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இம்மாதம் 4ம் தேதி சிறப்பு புலனாய்வு குழு, அவரை கைது செய்தது.ரேவண்ணாவின் முன்னாள் உதவியாளர் பண்ணை வீட்டில், அந்த பெண் மீட்கப்பட்டார். ரேவண்ணாவின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.இதற்கிடையில், அவர் கடத்தியதாக சொல்லப்பட்ட பெண் பேசிய வீடியோ நேற்று, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், 2 நிமிடங்கள் 32 வினாடிகள் பேசி உள்ளார். அதாவது, அந்த பெண்ணை, சிறப்பு புலனாய்வு குழு மீட்பதற்கு முன், பேசப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது.

உறவினர் வீடு

வீடியோவில் பெண் பேசி இருப்பதாவது:என்னை யாரும் கடத்தவில்லை. நானாக தான் வீட்டில் இருந்து வந்தேன். பவானி, ரேவண்ணா, பிரஜ்வல், பாபண்ணா ஆகியோரால் எனக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. எங்கள் ஊர்க்காரர்கள் ஏதேதோ பேசி கொள்வதால், மிகவும் கவலை அடைந்துள்ளேன். எனவே, நான்கு நாட்கள் இருக்கலாம் என்று உறவினர் வீட்டுக்கு வந்துள்ளேன்.தற்போது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளேன். 2 நாட்களுக்கு பின், நானே வருகிறேன். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன்.

தொந்தரவு செய்யாதீர்

யார் என்ன சொன்னாலும் தலையில் போட்டு கொள்ள வேண்டாம். நான் பாதுகாப்பாக உள்ளேன். அவரால் எனக்கு தொந்தரவு ஏற்படவில்லை. வந்த பின், யாரிடம் என்ன சொல்ல வேண்டுமே, அதை சொல்கிறேன். தயவு செய்து போலீசாரை வீட்டுக்கு அனுப்பி யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். குழந்தைகள் இருப்பர்; அவர்கள் பயப்படுவர்.இவ்வாறு அவர் பேசி உள்ளார்....பாக்ஸ்...படம்: 13_Manju MLAமஞ்சுபா.ஜ., - எம்.எல்.ஏ., மீதுபுதிய குற்றச்சாட்டுகாங்கிரஸ் பிரமுகர் நவீன்கவுடா தான், ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ அடங்கிய பென்டிரைவை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் தலைமறைவாக இருந்து கொண்டு, முன் ஜாமினுக்கு விண்ணப்பித்திருந்தார். முன் ஜாமின் வழங்கப்படவில்லை.இதற்கிடையில், அவரது முகநுாலில் நேற்று ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில், குறிப்பிட்டிருப்பதாவது:ஏப்ரல் 20ம் தேதி, சாலையில் கிடந்த பென்டிரைவை எடுத்து, அரகலகூடு எம்.எல்.ஏ., மஞ்சுவிடம், ஏப்ரல் 21ம் தேதி, அரகலகூடுவின் மாருதி திருமண மண்டபத்தில் வழங்கினேன். குமாரசாமி சொன்னபடி, வீடியோ வெளியான விஷயத்துக்கு பின்னணியில், இருக்கும் பெரிய தலைவர், அரகலகூடு எம்.எல்.ஏ., இருக்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது குறித்து, எம்.எல்.ஏ., மஞ்சு, மைசூரில் நேற்று கூறுகையில், ''மாருதி திருமண மண்டபத்துக்கு நான் சென்றது உண்மை. ஆனால், நவீன்கவுடா யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு பென்டிரைவ் வழங்கியதாக அவர் கூறியிருக்கிறார் என்றால், அவரே வீடியோவை வெளியிட்டிருப்பார். சிறப்பு புலனாய்வு குழு, முதலில், அவரை கைது செய்ய வேண்டும்,'' என்றார்....பாக்ஸ்...பிரீதம் கவுடா ஆதரவாளர்கள் கைதுபென்டிரைவ் வெளியிட்ட விஷயம் தொடர்பாக, ஹாசனில், சேத்தன், லிகித் என்ற இருவரை, சிறப்பு புலனாய்வு குழு நேற்று கைது செய்தது. இருவரும், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீதம் கவுடாவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களது ஸ்ரவணபெலகொளா, எலகுண்டா வீடுகளில், நேற்று சோதனை நடத்திய அதிகாரிகள் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.காங்கிரஸ் பிரமுகர் நவீன்கவுடா தான், ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ அடங்கிய பென்டிரைவை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் தலைமறைவாக இருந்து கொண்டு, முன் ஜாமினுக்கு விண்ணப்பித்திருந்தார். முன் ஜாமின் வழங்கப்படவில்லை.இதற்கிடையில், அவரது முகநுாலில் நேற்று ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில், குறிப்பிட்டிருப்பதாவது:ஏப்ரல் 20ம் தேதி, சாலையில் கிடந்த பென்டிரைவை எடுத்து, அரகலகூடு எம்.எல்.ஏ., மஞ்சுவிடம், ஏப்ரல் 21ம் தேதி, அரகலகூடுவின் மாருதி திருமண மண்டபத்தில் வழங்கினேன். குமாரசாமி சொன்னபடி, வீடியோ வெளியான விஷயத்துக்கு பின்னணியில், இருக்கும் பெரிய தலைவர், அரகலகூடு எம்.எல்.ஏ., இருக்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது குறித்து, எம்.எல்.ஏ., மஞ்சு, மைசூரில் நேற்று கூறுகையில், ''மாருதி திருமண மண்டபத்துக்கு நான் சென்றது உண்மை. ஆனால், நவீன்கவுடா யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு பென்டிரைவ் வழங்கியதாக அவர் கூறியிருக்கிறார் என்றால், அவரே வீடியோவை வெளியிட்டிருப்பார். சிறப்பு புலனாய்வு குழு, முதலில், அவரை கைது செய்ய வேண்டும்,'' என்றார்.

பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது புதிய குற்றச்சாட்டு

பென்டிரைவ் வெளியிட்ட விஷயம் தொடர்பாக, ஹாசனில், சேத்தன், லிகித் என்ற இருவரை, சிறப்பு புலனாய்வு குழு நேற்று கைது செய்தது. இருவரும், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீதம் கவுடாவின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களது ஸ்ரவணபெலகொளா, எலகுண்டா வீடுகளில், நேற்று சோதனை நடத்திய அதிகாரிகள் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

பிரீதம் கவுடா ஆதரவாளர்கள் கைது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ