உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிஜ் பூஷன் சிங்குக்கு சீட் இல்லை

பிரிஜ் பூஷன் சிங்குக்கு சீட் இல்லை

புதுடில்லி, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக 10 ஆண்டுகள் இருந்த பா.ஜ., - எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, முன்னணி மல்யுத்த வீராங்கனையர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து, மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். உத்தர பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யான அவர் மீதான குற்றச்சாட்டு பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரிஷ் பூஷன் மீதான குற்றச்சாட்டு காரணமாக, அவக்கு பதிலாக, அவரது மகன் கரண் பூஷனுக்கு கைசர்கஞ்ச் இந்த முறை பா.ஜ., வாய்ப்பளித்துள்ளது. அதேபோல், ரேபரேலி தொகுதி வேட்பாளராக தினேஷ் பிரதாப் சிங் அறிவிக்கப்பட்டுஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

MADHAVAN
மே 03, 2024 12:10

பிஜேபி ல வாரிசுகளுக்கு சீட் இல்லை, அப்போ இவரு யாரு?


MADHAVAN
மே 03, 2024 12:09

பிஜேபி ல வாரிசு அரசியல் இல்லை னு சொன்னாங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை