உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் இரு மொழியல்ல... பல மொழிகள்... முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பலே திட்டம்

ஆந்திராவில் இரு மொழியல்ல... பல மொழிகள்... முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பலே திட்டம்

புதுடில்லி; ஆந்திராவில் உள்ள பல்கலைகளில் பல மொழி கற்பிக்கும் மையங்களை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டில்லி சென்றுள்ள அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.டில்லியில் முகாமிட்டுள்ள ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மாநில திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். https://www.youtube.com/embed/E1sUDuRq0csஇந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: இன்று மிக முக்கிய 3 சந்திப்புகள் நடைபெற்றது. அதில், ஒன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தான். இரு கட்சிகளின் இடையே நடக்கும் வழக்கமான சந்திப்பு தான் இது. எங்களின் யோசனைகளை பரிமாறிக் கொண்டதுடன், என்.டி.ஏ., கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினோம். அதேவேளையில், நில அபகரிப்பு (தடை) சட்ட மசோதா, கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. நில அபகரிப்பு மற்றும் அது தொடர்பான மனுக்களும் பெரும் சவாலாக இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் இதனை சிறப்பாக அமல்படுத்தியுள்ளனர். தற்போது ஆந்திர சட்டசபையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, இதற்கு ஒப்புதல் பெறுவதற்காக டில்லிக்கு வந்துள்ளோம். விரைந்து இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கொள்கிறேன், இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: ஒவ்வொருவரும் மக்கள் தொகை எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனை எப்படி கணக்கிடுவது என்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால், இது தாமதமான ஒன்று. சரியான நேரத்தில் இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்யும் என்று நம்புகிறேன். உலகளாவிய வாய்ப்புகளுக்கு ஏற்ப அனைவரும் பல மொழிகளை கற்றுக் கொள்வது அவசியமாகிறது. எங்கள் மாநிலத்தில் உள்ள பல்கலைகளில் பல மொழி கற்பிக்கும் மையங்களை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kogulan
மார் 06, 2025 15:40

பல மொழிகள் கற்பது பல கண்களுக்கு சமம், சும்மா அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள் , வாய்ப்பு கிடைத்தால் கற்கலாம்,


Savitha
மார் 06, 2025 10:39

படித்தவன் என்றும் படித்தவன் தான், படிப்பின் அருமை தெரிந்த மனிதர், வாழ்க,வாழ்த்துக்கள்.


P.Sekaran
மார் 06, 2025 10:22

அவர் நல்ல முதலமைச்சர் அவர் மக்களை பற்றி சிந்திக்கிறார் வரும் காலத்தை பற்றி சிந்திக்கிறார் நம் திருட்டு திராவிட மாடல் ஆட்சி போல் குண்டுசட்டியில் குதிரை ஓட்டாமல் காலத்திற்கேற்ப காய் நகர்துகிறார். இவர் மும்மொழியை எதிர்ப்போம் என்று கூறுகிறார். இப்பொழுது தமிழ்நாட்டில் நிலைமை சரியில்லை இப்பொழுது இதை விட்டால் வேறு ஒன்றுமில்லை ஆனால் மற்ற மாநிலங்கள் முன்னேற்றத்தை முன் நிறுத்துகிறது


RAMKUMAR
மார் 06, 2025 08:12

படிச்சவன் , புத்திசாலி , சூப்பர் முடிவு ...


அப்பாவி
மார் 06, 2025 06:39

சரிதான். பல்கலை லெவலில் தான் பல மொழிகள் கத்துக் குடுக்கணும். இங்கே எல்.கே.ஜி லெவலிலேயே ஹை..ஹைன் நு குதிரை ஓட்டணும்கறாங்க.


ஆரூர் ரங்
மார் 06, 2025 11:18

மொழிகளைக் கற்க 13 வயது வரையே சரியான காலம் என்பது அறிவியல். வயது முதிர்ந்து விட்டால் மொழி கற்கும் திறன் குறைந்துவிடும்.


PARTHASARATHI J S
மார் 06, 2025 06:33

முதல்வர் சந்திரபாபு நாய்டு காரியவாதி. எதையுமே அறிவார்ந்ததாக செயல்படுகிறார். முடிந்தால் தமிழர்கள் ஆந்திராவில் குடியேறுங்கள். அமைதியான வாழ்க்கை.


kr
மார் 06, 2025 06:06

Meanwhile our neighbouring state is trying to win win situations with union government. TN state also deserves such a government that avoids needless confrontations on emotive issues and focus on development agenda


orange தமிழன்
மார் 06, 2025 05:59

வாழ்த்துகள்... திரு.சந்திரபாபு காரு.....பொறாமை லைட்டா இருக்கு.....நமக்கு இப்படி ஒரு முதல்வர் இல்லயே என்று..... ஹும்


தாமரை மலர்கிறது
மார் 06, 2025 02:18

சந்திரபாபுவை பார்த்து ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். ஏழை ஆந்திரா மாணவர்களுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்க தயாராக உள்ளார். அவர் எந்தவித அரசியலும் செய்யவில்லை.


மணி
மார் 06, 2025 00:43

நீங்கள்தான் மக்களின் தலைவன்.. வாழ்க வளமுடன்


சமீபத்திய செய்தி