உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இப்ராஹிம் தொடர்ந்த வழக்கு தேவகவுடா, குமாரசாமிக்கு நோட்டீஸ்

இப்ராஹிம் தொடர்ந்த வழக்கு தேவகவுடா, குமாரசாமிக்கு நோட்டீஸ்

பெங்களூரு : ம.ஜ.த., மாநில தலைவர் பதவியில் இருந்து இப்ராஹிமை நீக்கியது தொடர்பாக, அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மாநில தலைவர் குமாரசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராக இருந்த சி.எம்.இப்ராஹிம், அக்கட்சியின் எம்.எல்.சி.,யாக இருந்தார். அரசியல் மாற்றம் காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் ம.ஜ.த.,வில் இணைந்தார்.அவர், 2022 ஆகஸ்ட் 3ல் நடந்த ம.ஜ.த., செயற்குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் மாற்றத்தால், பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணிக்கு இப்ராஹிம் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கிய தேவகவுடா, குமாரசாமியை மாநில தலைவராக நியமித்தார்.தன்னை நீக்கியதை எதிர்த்து, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இப்ராஹிம் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனு, நீதிபதி பூனாச்சா முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பூனாச்சா, தேவகவுடா, குமாரசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அத்துடன், வழக்கு விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ