மேலும் செய்திகள்
பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி அரசு டாக்டர் கைது
8 hour(s) ago
அடையாளம் தெரியாத முதியவருக்கு சிகிச்சை
8 hour(s) ago
பைக் திருடிய வாலிபர் கைது
9 hour(s) ago
சைபர் கிரைம், டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு
9 hour(s) ago
மைசூரு: ''என்னை ஒக்கலிகர் தலைவர் என, நான் எப்போதாவது கூறினேனா. நான் அனைத்து சமுதாயங்களின் தலைவர்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:என் நிலத்தில் கல் உடைக்க, குமாரசாமியிடம் நான் அனுமதி கேட்க வேண்டுமா. 'ஏ' டீம், 'பி' டீமாக இருந்த பா.ஜ., மற்றும் ம.ஜ.த., பார்ட்னர்ஸ் ஆகிவிட்டனர். மாண்டியாவில் ஸ்டார் சந்துரு, வேட்பாளர் அல்ல. சித்தராமையாவும், சிவகுமாரும் தான் வேட்பாளர்.லோக்சபா தேர்தலில், குமாரசாமியை தோற்கடித்து சென்னபட்டணாவுக்கு திருப்பி அனுப்புங்கள். காங்கிரஸ் ஒரு ஜாதி, ஒரு மதத்திற்கு ஆதரவாக இருந்தது இல்லை.நாட்டு மக்களின் வங்கி கணக்கில், 15 லட்சம் ரூபாய் போடுவதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். யாருக்காவது பணம் வந்துள்ளதா. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பானதா. இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்ததா. இவர் மீண்டும் ஓட்டு கேட்க வந்தது ஏன்.ஊழலை அகற்ற வேண்டும் என வாக்குறுதி திட்டத்தை செயல்படுத்தினோம். ஆனால் குமாரசாமியோ, திட்டங்களால் பெண்கள் திசை மாறுவதாக கூறுகிறார். இவர் மீது பெண்கள் கோபத்தில் உள்ளனர்.குமாரசாமி எங்கள் வாழ்க்கையை பற்றி கேள்வி எழுப்புகிறார். இவர் முதல்வரானார், இவரது தந்தை பிரதமரானார். சா.ரா.மகேஷ், புட்டராஜு, தம்மண்ணாவுக்கு சாக்லேட் கொடுத்தனர்.ம.ஜ.த.,வில் தொண்டர்கள் இல்லையா. சிவகுமார் ஒக்கலிகர் லீடர் அல்ல என, சா.ரா.மகேஷ் கூறியுள்ளார். என்னை ஒக்கலிகர் தலைவர் என, நான் எப்போதாவது கூறினேனா. நான் அனைத்து சமுதாயங்களின் தலைவர்.இவ்வாறு அவர் கூறினார்.
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago