உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்கட்சி எம்.எல்.ஏ., ஆளும் கட்சிக்கு தாவல்: எதிர்கட்சி இல்லாத சட்டசபையானது சிக்கிம்

எதிர்கட்சி எம்.எல்.ஏ., ஆளும் கட்சிக்கு தாவல்: எதிர்கட்சி இல்லாத சட்டசபையானது சிக்கிம்

காங்டாங்: சிக்கிம் சட்டசபையில் ஒரேஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் டென்சிங் நூர்பு லம்தா, ஆளும் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் ஐக்கியமானார்.இதையடுத்து எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபையாக மாறியது சிக்கிம்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 32 இடங்கள் கொண்ட சிக்கிம் சட்டசபையில், 31 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வராக பிரேம்சிங் தமாங் பதவியேற்றார்.இதில் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ., டென்சிங் நூர்பு லம்தா எதிர் கட்சி தலைவராக இருந்தார்.இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று தன் கட்சியை கலைக்காமல் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டென்சிங் நூர்பு லம்தா ஐக்கியமானார். இதனால் எதிர்கட்சியே இல்லாத சட்டசபையாக சிக்கிம் சட்டசபை மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ganesun Iyer
ஜூலை 11, 2024 00:21

40/40 தான் எதிர் கட்சியா இருக்கு என்ன சாதிக்குது / சாதிக்க போவுது? எம்பி சம்பளம்+ படி... கேண்டின் வசதி.. etc.,


ديفيد رافائيل
ஜூலை 10, 2024 22:46

இந்த மாதிரி சட்டசபை அமைய கூடாது, கேள்வி கேட்க ஆள் இருந்தா மட்டும் தான் ஆளுங்கட்சி ஒழுக்கமா இருப்பானுங்க.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை