உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி.,க்கு எதிர்ப்பு; பார்லி., முன் ராகுல் போராட்டம்

ஜி.எஸ்.டி.,க்கு எதிர்ப்பு; பார்லி., முன் ராகுல் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜி.எஸ்.டி., வரியை திரும்பப் பெறக் கோரி, பார்லிமென்டிற்கு வெளியே காங்., எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் போராட்டம் நடத்தினார்.ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் இரண்டுக்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஜி,எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தனர். ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் நிதின் கட்கரியே குரல் கொடுத்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களும் கோரிக்கையை வலியுறுத்த துவங்கினர்.

போராட்டம்

இன்று (ஆகஸ்ட் 06) கோரிக்கையை வலியுறுத்தி, பார்லிமென்டிற்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் போராட்டம் நடத்தினார். அவருடன் காங்கிரஸ் எம்.பி.,க்கள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களும் சேர்ந்து கொண்டனர். கோரிக்கை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி ராகுல் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Ray
ஆக 13, 2024 05:20

ஆயுள் காப்பீடு சேமிப்பை ஊக்குவிக்க வேண்டுமா இல்லை பங்கு சந்தை முதலீடுதான் உசிதமா? அரசின் நிலைப்பாடு என்ன?


தாமரை மலர்கிறது
ஆக 06, 2024 18:57

ஜிஎஸ்டியை மக்கள் விரும்பித்தான் கட்டுகிறார்கள் . காரணம் ஜிஎஸ்டியால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. சம்பளம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கு நன்றியாக மக்கள் விருப்பப்பட்டு வரியாக செலுத்துகிறார்கள். ஜிஎஸ்டியை குறைத்தால், அரசிற்கு தேவையான பணத்தை கம்பெனிகளிடம் இருந்து வசூலிக்க நேரிடும். அப்போது கம்பெனி விரிவு படுத்தமுடியாது. அதனால் கம்பெனி வேலை கொடுக்க இயலாது. தொழில்கள் வேலைவாய்ப்புகள் பெறுக, ஜிஎஸ்டி அவசியம். மக்களுக்காகத்தான் அரசு நடக்கிறது. அதனால் அரசை நடத்த மக்கள் தான் வரி செலுத்தவேண்டும் ஒழிய, கம்பெனிகள் அல்ல.


Kumar Kumzi
ஆக 06, 2024 15:03

இவன் இந்தியாவையும் பங்களாதேஷ் நிலைமைக்கு தள்ள பார்குறான் இந்த தேசத்துரோகியை முதலில் இத்தாலிக்கு நாடு கடத்துங்கள்


GMM
ஆக 06, 2024 14:37

இந்தியாவில் மத்திய gst, மாநில gst என்று dual tem முறையில் உள்ளது. முதலில் புள்ளி கூட்டணி ஆளும் மாநில ஒப்புதல் வேண்டாமா? மத்திய அமைச்சர் கோரிக்கைக்கு பின் காங்கிரஸ் கூப்பாடு ஏன்? இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகம் மற்றும் மத்திய அரசு என்று 4 அடுக்கு முறை உள்ளது. வரி பங்கீடு மத்திய, மாநிலங்களுக்கு மட்டும். மத்திய அரசு வரி வசூல் செய்து, தன் பங்கு போக, பிற 3 அமைப்புகளுக்கு பங்கீடு செய்ய வேண்டும். தேசிய உணர்வு கூடும். சில மாநிலங்கள் வாக்கு பெற தேச விரோத கருத்து உருவாக்கி வருகின்றன.


nagendhiran
ஆக 06, 2024 14:31

கொண்டுவந்தவனே எதிர்ப்பது?


nagendhiran
ஆக 06, 2024 14:29

பப்புவிடம் யாராவது கேட்டு சொல்லுங்க ஜிஎஸ்டி முன்பு? இன்சுரன்ஸ்க்கு வரி இருந்தது இல்லையானு?


இறைவி
ஆக 06, 2024 14:08

நாராயணா! நாராயணா!! இங்கு GST பற்றி கருத்து போடுபவர்கள் GST பற்றியோ முன்பு இருந்த மாநில வரி பற்றியோ அல்லது VAT பற்றியோ அடிப்படை அறிவு கூட இல்லாமல் பிஜெபிக்கு எதிராக கருத்து போடவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தப்பு தப்பாக எழுதுகிறார்கள். நான் வரி விதிப்பு பற்றி தெரிந்தவன் என்ற முறையில் எழுதுகிறேன். பழைய மாநில மற்றும் VAT வரி விதிப்பில் பலமுனை வரியாக பலமுறை விதிக்கப்பட்ட வரிகளை ஒரு பொருளுக்கு ஒரு முறை வரி மட்டுமே விதிக்கப்படும் வரியாக GST உள்ளது. ஒவ்வொரு விற்பனையின் போதும் விதிக்கப்படும் GST வரி அடுத்தமுறை விற்பனையின் போது விதிக்கப்படும் GSTயில் குறைக்கப்படும். GST விதிக்கும் வியாபாரி ஏமாற்றலாமே தவிர GST சட்டம் ஏமாற்ற ஏற்பட்டதல்ல.


Mohan D
ஆக 06, 2024 16:02

அதை நாம் சொல்லி என்ன பயன் சார் சொல்ல வேண்டியவங்க சொல்லணும் தாவது பிஜேபி நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் சொல்லி இவுங்கள துவம்சம் செய்யணும் இல்லாட்டி அடித்தட்டு மக்களிடம் இவுனுக பொய்தான் எடுபடுது


MUTHU
ஆக 06, 2024 16:55

உதாரணமாக ஒரு பொருள் பெங்களுருவில் இருந்து பம்பாய் விற்கப்படுகிறது என்று வைத்து கொள்வோம். பம்பாயில் நுழையும்பொழுது விற்பனை வரி போக பில்லின் மொத்த தொகையில் நுழைவு வரி என்று சுமார் பதினெட்டு அல்லது இருபது சதவீத வரி வசூலிப்பார்கள். விஷயம் இதுவல்ல. இந்த நுழைவு வரி கட்டாமல் ஏய்ப்பதற்கு அரசு அதிகாரிகள் உடந்தை போய் மாமூல் கொள்ளை - கொள்ளை அடிப்பார்கள். இதுவெல்லாம் gst வந்த பின்பு ஒழிந்து விட்டது. தொழில் நடத்துபவர்களுக்கு தெரியும் GST நல்லதா கெட்டதா என்று.


konanki
ஆக 06, 2024 13:17

தமிழகத்தில் இன்சூரன்ஸ் வாங்குபவர்களை விட டாஸ்மாக் சரக்கு வாங்கும் மக்கள் பல மடங்கு அதிகம். ஆதலால் ராகுல் காந்தி டாஸ்மாக் சரக்கின் மீதான தமிழக ஜி எஸ் டிவரியை எதிர்த்து தமிழக சட்டசபை வளாகத்திற்கு முன் போராட்டம் ஆர்பாட்டம் உடனடியாக தொடங்க வேண்டும்.


Prabakaran VK
ஆக 06, 2024 13:15

எல்லா மாநில நிதி அமைச்சர்களும் சேர்ந்து முடிவெடுத்தல் மட்டுமே விலக்கு அளிக்க முடியும். நாட்டின் நிதி அமைச்சர் இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது.


konanki
ஆக 06, 2024 13:14

மது வின் மீது ஜி எஸ் டி விதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தொகை தலைமையில் தமிழக சட்டபேரவை முன்பு போராட்டம் ஆர்பாட்டம் உடனடியாக தொடங்க மது பிரியர்கள் வேண்டுகோள். முழு ஆதரவு உயிர் கொடுக்க மது பிரியர்கள் ரெடி.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ