மேலும் செய்திகள்
குரங்கம்மை பாதிப்பு: வழிகாட்டுதல் வெளியீடு
21-Aug-2024
பெங்களூரு: குரங்கம்மையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பெங்களூரு, மங்களூரில் சிறப்பு வார்டுகள் அமைப்பட உள்ளன.குரங்கம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நம் அண்டை நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்படி, கர்நாடகாவில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இது குறித்து சுகாதார துறை கமிஷனர் ரன்தீப் விடுத்த அறிக்கை: தொற்று பரவும் நாடுகளில் இருந்து பெங்களூரு, மங்களூரு சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு வரும் பயணியரை கண்காணிக்க வேண்டும் குரங்கம்மையால் பாதிக்கப்படும் நபர்கள் என்ற சந்தேகம் எழுந்தால், தனிமைப்படுத்தி, உடனடியாக மாவட்டம், மாநில சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் அத்தகைய நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பெங்களூரின் இந்திராநகரில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையிலும்; தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் வென்லாக் மருத்துவமனையிலும் சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட நபரின் ரத்த மாதிரிகளை எடுத்து, பெங்களூரு மருத்துவ கல்லுாரியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் தொற்று பாதிக்கப்பட்டது உறுதியான பின், 21 நாட்கள் வரை அல்லது குணமாகும் வரை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சையின்போது, தனி உடைகள் அளிக்க வேண்டும் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21-Aug-2024