உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் இருந்து 6,700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்பு: வெளியுறவுத்துறை தகவல்

வங்கதேசத்தில் இருந்து 6,700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்பு: வெளியுறவுத்துறை தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து 6,700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்' என மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக, மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது இயல்பு நிலை படிபடியாக திரும்பி வருகிறது. இது தொடர்பாக, செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து 6,700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பியுள்ளனர். வங்கதேச அரசிடம் இருந்து எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது. அண்டை நாடுகளுடன் மிகவும் அன்பான மற்றும் நட்பான உறவைப் பகிர்ந்து கொள்கிறோம். வங்கதேசத்தில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 27, 2024 08:32

எங்க புலிகேசி மன்னர் மீட்க வாய்ப்பே கொடுக்கலையா ????


Jay
ஜூலை 25, 2024 20:51

அப்படீன்னா, மீட்டு கொண்டு வந்தது திம்க இல்லையா? பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல. இல்ல உக்கரைன் நாடகம் தெரிஞ்சு போச்சா?


Sivasankaran Kannan
ஜூலை 25, 2024 18:54

எல்லோரையும் பிடித்து ஒரு இடத்தில அடைத்து - எங்கள் புலிகேசிக்கு நன்றி சொல்ல மைக்கை கொடுக்கவும்..


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ