உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓடும் ரயிலில் பெட்டிகள் பிரிந்ததால் பயணியர் பீதி

ஓடும் ரயிலில் பெட்டிகள் பிரிந்ததால் பயணியர் பீதி

பாட்னா : பீஹாரில், எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனியாக பிரிந்து சென்றதால் பயணியர் பீதியடைந்தனர்.டில்லியில் இருந்து பீஹாரின் இஸ்லாம்பூர் நோக்கி மகத் விரைவு ரயில் நேற்று சென்றது. இந்த ரயில், பீஹார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தின் திவின்கஞ்ச் ரயில் நிலையத்தை நேற்று காலை 11:08 மணிக்கு கடந்தபோது, ரயிலின் இரு பெட்டிகள் திடீரென பிரிந்தன.இதனால் அதிர்ச்சி அடைந்த பயணியர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முற்பட்டனர். சுதாரித்த ரயில் ஓட்டுனர், ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே மீட்பு மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், ரயில் பெட்டி கள் தனியாக பிரிந்து சென்ற பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது, ரயிலின் எஸ் - 6 மற்றும் எஸ் - 7 பெட்டிகளுக்கு இடையே உள்ள இணைப்பு உடைந்தததால், அவை தனியாக பிரிந்து சென்றதை கண்டறிந்தனர்.இதன் காரணமாக, இவ்வழித்தடத்தில் மூன்று மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை