| ADDED : ஆக 17, 2024 11:18 PM
பெங்களூரு: பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், சந்திரா லே - அவுட்டில் கட்டிய பிளாட்டுகள் மளமளவென அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.இதுகுறித்து, பி.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரு, நாகரபாவியின், சந்திரா லே - அவுட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை பி.டி.ஏ., கட்டியுள்ளது. 120 பிளாட்டுகள் உள்ளன. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை உள்ள, அனைத்து பிளாட்டுகளும் விற்பனையாகிவிட்டன.ஆகஸ்ட் 10ல் கடைசி பிளாட்டை விற்றோம். பி.டி.ஏ., வரலாற்றில் இப்போதுதான் முதன் முறையாக, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக விலையுள்ள பிளாட் விற்கப்பட்டன. எங்களின் பிளாட்டுகளுக்கு மக்களிடம், அமோக வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.வடக்கு மற்றும் கிழக்கு முகமாக இருக்கும் பிளாட்டுகளுக்கு, ஐந்து சதவீதம் கூடுதல் விலை இருக்கும். வாஸ்து காரணமாக வேறு திசைகளில் உள்ள பிளாட்டுகளை, பொது மக்கள் வாங்குவது இல்லை. இவற்றின் விலை ஓரளவு குறைவாக இருக்கும்.ஹுன்னிகெரேவில், இரண்டு மாடிகள் கொண்ட வில்லா பிளாட்டுகளின் விலையும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்டதாகும். வரும் அக்டோபரில் விற்பனை துவங்கும் வாய்ப்புள்ளது. தற்போது மின் இணைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.